நாடாளுமன்றத்தை காலவரையின்றி ஒத்தி வைக்க திட்டம்
டெல்லி:
பெர்னாண்டஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தை நடத்த விடமால் எதிர்க் கட்சிகள் தடுத்து வருவதால் இருஅவைகளையும் காலவரையின்றி ஒத்தி வைக்க அரசு திட்டமிட்டு வருகிறது.
கார்கில் போரின்போது உயிரிழந்த வீரர்களின் உடல்களைக் கொண்டு செல்ல சவப் பெட்டிகள் வாங்கியதிலும்ஆயுதங்கள் வாங்கியதிலும் பல கோடி ஊழல் நடந்துள்ளது. இதைக் கண்டித்து எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்திவருகின்றன.
பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதவி விலக வேண்டும் எனக் கோரி வருகின்றன.
ஆனால், இதை ஏற்க பிரதமர் வாஜ்பாய் மறுத்து வருவதால், லோக் சபாவையும், ராஜ்யசபாவையும் நடத்த விடாமல்எதிர்க் கட்சிகள் அமளி செய்து வருகின்றன. இன்று 3வது நாளாக இரு அவைகளும் கூடியதும் எதிர்க் கட்சிஉறுப்பினர்கள் அவையின் மையப் பகுதியில் கூடி அரசை எதிர்த்து கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
இந் நிலையில் தொடர்ந்து அவைகளை நடத்த விடாமல் எதிர்க் கட்சிள் தடுப்பதால், இரு அவைகளையும்காலவரையறை இன்றி ஒத்தி வைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அத்வானி கூறினார்.
பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான மல்ஹோக்தா கூறுகையில், கடந்த வாரம் தான் அவையின் ஒழுக்கத்தையும்விதிமுறைகளையும் பின்பற்றுவதாக எதிர்க் கட்சிகள் உறுதியளித்தன. ஆனால், இப்போது தொடர்ந்துஅவைகளையும் நடத்த விடாமல் எதிர்க் கட்சிகள் அமளி செய்து வருகின்றன. இதனால், அவைகளை நடத்துவதால்எந்தப் பயனும் இல்லை என்றார்.
தெகல்கா ஆயுத பேர விவகாரத்தையடுத்து ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதவியை ராஜினாமா செய்தார். இந்த விசாரணைநடந்து வரும்போதே அவரை பிரதமர் மீண்டும் அமைச்சராக்கினார். இப்போது மீண்டும் அவர் வகிக்கும்பாதுகாப்புத்துறை மீது பெரும் ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
மேலும் போபர்ஸ் விவகாரத்தை வைத்து காங்கிரஸை பதவியை விட்டு இறக்கியதில் பா.ஜ.கவுக்கும் ஜார்ஜ்பெர்னாண்டசுக்கும் பெரும் பங்குண்டு. இதனால், பா.ஜ.க. அரசு மீதான ஆயுத ஊழல் விவகாரத்தை லேசில்விட்டுவிட காங்கிரசும் பிற எதிர்க் கட்சிகளும் தயாராக இல்லை.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications