விலை உயர்வைக் கண்டித்து அரசு ஊழியர்கள் பேரணி
சென்னை:
கட்டண மற்றும் விலைவாசி உயர்வுகளைக் கண்டித்தும் தங்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் ரத்து செய்யப்பட்தைஎதிர்த்தும் நேற்று (புதன்கிழமை) சென்னையில் அரசு ஊழியர்கள் கண்டனப் பேரணியை நடத்தினர்.
தமிழக அரசு சமீபத்தில் விலை உயர்வு மற்றும் பல சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் அரசுஊழியர்களின் எண்ணிக்கையை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 30 சதவீதம் குறைப்பது, பண்டிகை முன் பணம்,விடுப்பு சரண்டர் சலுகை, பஞ்சப்படி ஆகியவற்றை நிறுத்தி வைத்தது போன்ற நடவடிக்கைகளை எடுத்தது.
இந்த நடவடிக்கைகளை கண்டித்து கடந்த 3ம் தேதி முதல் தமிழகத்தின் வல்வேறு பகுதிகளில் அரசு ஊழியர்சங்கத்தினர், அரசு அலுவலகங்கள் முன்பு பிரச்சார பயணம் மேற்கொண்டனர்.
இதன் இறுதிக்கட்டமாக, நேற்று தமிழக அரசை கண்டித்து பிரம்மாண்டமான பேரணி நடத்தினர். தமிழகம்முழுவதிலும் இருந்து சென்னைக்கு வந்திருந்த அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் தலைமையில் சென்னை தீவுத் திடலில் மன்றோசிலை அருகில்இருந்து பேரணி புறப்பட்டு மே தின பூங்காவை வந்தடைந்தது.
பேரணி முடிவில் அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஸ்ரீதரன் கூறுகையில்,
காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்துவது பற்றி முடிவு செய்வதற்காக 19ம் தேதி இச்சங்கத்தின்நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த போராட்டத்தை துவக்குவதற்கு முன் ஆசிரியர்களின் சங்கங்களையும் கலந்து ஆலோசிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications