தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரம்
சென்னை:
இன்று (வியாழக்கிழமை) காலை நாடாளுமன்றம் தாக்கப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து விமான நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் போலீசாரும் ராணுவத்தினரும்குவிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது மேலும் பல போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியைச் சுற்றிலும் போலீசார் ரோந்து சுற்றிவருகின்றனர்.
அதேபோல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் எக்மோர் ரயில் நிலையத்திலும் போலீசார் அதிக அளவில்குவிக்கப்பட்டுள்ளனர். இங்கு வந்து செல்லும் அனைத்துப் பயணிகளும் தீவிரப் பரிசோதனைக்கு உள்ளாகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாகரோந்து சுற்றி வருகின்றனர்.
கோயம்புத்தூர் விமான நிலையத்திலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமானபொருட்களைச் சோதித்து போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூர் ரயில் நிலையம், பஸ் நிலையம், கோவில்கள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் பல முக்கியஇடங்களிலும் போலீசார் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதேபோல், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்பட அனைத்து நகரங்களிலும் உள்ள விமான, ரயில், பஸ்நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications