மாணவர்கள் மீது தாக்குதல்: வக்கீல்கள் போராட்டம்
சென்னை:
சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான போலீசாரின் தாக்குதலை கண்டித்து, நேற்று (வியாழக்கிழமை) சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான போலீசாரின் தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டக்கல்லூரி மாணவர்கள் வாயில் கறுப்புத்துணி கட்டி , சட்டக்கல்லூரிமுன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவிற்கு உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே மனித சங்கிலிபோராட்டத்தை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தொடங்கினர்.
சிறிது நேரத்திற்கு பின் அவ்வழக்கறிஞர்கள் சட்டக்கல்லூரி நோக்கி சென்றனர். அங்கிருந்த மாணவர்களும் மனிதசங்கிலியில் பங்கேற்க தொடங்கினர். இரு தரப்பினரையும் சேர்த்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சாலையின் ஒரத்தில் நடந்து கொண்டிருந்த போராட்டம் பிறகு சாலையை மறைத்தபடி நின்று கொண்டு, அவர்கள்போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும், வழக்கறிஞர்களையும் விடியோ கேமரா மூலம் போலீசார் படம்பிடித்தனர். இதனால் பாரிமுனை பகுதியில் அரைமணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு ஆதரவாக பேசிவிட்டு பிறகு கலைந்து சென்றனர் வழக்கறிஞர்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications