கிரிக்கெட்: இந்தியா வெற்றி பெற இன்னும் 357 ரன்கள் தேவை
அகமதாபாத்:
இங்கிலாந்துக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 357ரன்களை எடுக்க வேண்டும்.
தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்களுடன் இங்கிலாந்து அணி இன்று(வெள்ளிக்கிழமை) நான்காவது நாள் ஆட்டத்தைத் தொடங்கியது.
ஆனால் அடுத்த 6 ரன்கள் எடுத்த நிலையிலேயே இங்கிலாந்து முதல் விக்கெட்டை இழந்தது. முதல் இன்னிங்சில்சதமடித்த டிரஸ்கோத்திக் இப்போது 12 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
அடுத்து பட்ச்சருடன் கேப்டன் ஹூசைன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இந்தியப் பந்து வீச்சாளர்களின் பந்துகளைச்சிதறடித்தனர். ஹூசைன் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு வந்த ஆட்டக்காரர்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை. இங்கிலாந்து அணி 257 ரன்களுக்குஆட்டமிழந்தது. துவக்க ஆட்டக்காரர் பட்ச்சர் அதிகபட்சமாக 92 ரன்கள் (9 பவுண்டரிகள்) எடுத்தார்.
இந்தியத் தரப்பில் ஹர்பஜன் சிங் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அனில் கும்ப்ளேக்கு 3 விக்கெட்டுகளும்,ஸ்ரீநாத்துக்கு ஒரு விக்கெட்டும் கிடைத்தன.
இதையடுத்து, 374 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொண்டு இந்திய அணியினர் களமிறங்கினர்.
இன்னும் ஒரு நாள் ஆட்டம் மீதமிருக்கையில், இன்றைய ஆட்டநேர இறுதியில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 17ரன்கள் எடுத்துள்ளது.
ஸ்கோர் விவரம்:
முதல் இன்னிங்ஸ்
இங்கிலாந்து - 407/10 (144.3 ஓவர்கள்)
இந்தியா - 291/10 (120.3 ஓவர்கள்)
2வது இன்னிங்ஸ்
இங்கிலாந்து - 257/10 (83.2 ஓவர்கள்)
இந்தியா - 17/0 (7 ஓவர்கள்)
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications