கண்டனம் தெரிவிப்பதிலும் பாகிஸ்தான் விஷமம்
டெல்லி:
இந்தியா மீது நடந்துள்ள தாக்குதலை அமெரிக்க, பிரிட்டன், ரஷ்யத் தலைவர்கள் தீவிரவாதிகளின் தாக்குதல்என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் அதிபர் மட்டும் தீவிரவாதிகளை ஆயுதம்தாங்கிய ஊடுருவல்காரர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைச் சுட்டிக் காட்டிய மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரும் தகவல் தொடர்புத்துறைஅமைச்சருமான பிரமோத் மகாஜன், இதன்மூலம் பாகிஸ்தானின் இரட்டை நிலையைப் புரிந்து கொள்ளலாம்என்றார். அவர் மேலும் கூறுகையில்,
இந்தியாவில் நடந்து வரும் தீவிரவாதச் செயல்களுக்கு முழுக்க முழுக்க பாகிஸ்தான் தான் காரணம். நாடாளுமன்றக்கட்டடத்தைத் தாக்கியவர்கள் லக்ஷர்-ஏ-தொய்பா அமைப்பினர் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தத் தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.
இன்று அதிகாலை 5 மணிக்கே நாடாளுமன்ற வளாகத்துக்குள் வந்துவிட்ட பிரமோத் மகாஜன், பாதுகாப்புநடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டார். பாதுகாப்பு குறித்து அவர் திருப்தி அடைந்த பின்னர் தான்நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்டது.
புதிதாக கிடைத்துள்ள தகவலின்படி தாக்குதல் நடத்தியபோது அந்தத் தீவிரவாதிகள் பாகிஸ்தான் வாழ்க எனகோஷம் எழுப்பியது தெரிய வருகிறது. அவர்கள் கோஷமிட்டதை நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பலரும்கேட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications