சென்னை-மும்பை ரயிலில் 4 சூட்கேஸ்கள் கிளப்பிய பீதி
சென்னை:
சென்னையிலிருந்து மும்பைக்குக் கிளம்பிய ரயிலில் கேட்பாரற்ற வகையில் கிடந்த 4 சூட்கேஸ்கள்பயணிகளிடையே பெரும் பீதியைக் கிளப்பின.
இன்று காலை சென்னை சென்ட்ரலிலிருந்து வழக்கம்போல் மும்பை எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இந்த ரயிலின் ஒருபெட்டியில் நான்கு சூட்கேஸ்கள் ஒரு செயினில் பூட்டப்பட்டிருந்தன. ஆனால் அந்த சூட்கேஸ்கள் யாருடையதுஎன்று தெரியவில்லை.
இதையடுத்து பயணிகள் மத்தியில் பீதி கிளம்பியது. நேற்றுதான் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள்தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த நிலையில் இந்த சூட்கேஸ்களிலும் ஏதாவது குண்டுகள் இருக்குமோ என்றுபயணிகள் பீதியடைந்தனர்.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.
சென்னையிலிருந்து உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அந்த நான்கு சூட்கேஸ்களையும்பத்திரமான இடத்திற்கு அப்புறப்படுத்திய நிபுணர்கள், அவற்றை உடைத்துச் சோதனையிட்டனர்.
அவற்றில் நிறைய எலக்ட்ரானிக்ஸ் கருவிகளும் பேட்டரிகளும் கிடந்தன. ஆனால் வெடிகுண்டு போன்றபொருட்கள் எதுவும் இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களும், பயணிகளும்நிம்மதியடைந்தனர்.
இருந்தாலும் அந்த ரயில் முழுவதுமாகப் பரிசோதிக்கப்பட்டது. பின்னர் மூன்று மணி நேரத் தாமதத்துடன் அந்தரயில் மும்பைக்குக் கிளம்பிச் சென்றது.
அண்ணா மேம்பாலத்திலும் அநாதை சூட்கேஸ்...
இதற்கிடையே சென்னையின் பரபரப்பு மிகுந்த அண்ணா மேம்பாலத்தின் கீழே ஒரு சூட்கேஸ் அநாதையாகக்கிடந்ததைக் கண்ட பொதுமக்கள் பெரும் பீதியடைந்தனர்.
உடனடியாக போலீசாரை வரவழைத்து, அதைப் பரிசோதித்ததில் அது வெற்று சூட்கேஸ் என்று தெரிய வந்தது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications