வாஜ்பாய்தான் தீவிரவாதிகளின் இலக்கு
டெல்லி:
பிரதமர் வாஜ்பாயைக் குறிவைத்துத்தான் நேற்று (வியாழக்கிழமை) தீவிரவாதிகள் நாடாளுமன்றத்துக்குள்புகுந்ததாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வழக்கமாக எந்த ஒரு வி.ஐ.பியும் 12ம் எண் கேட்டைப் பயன்படுத்துவதில்லை. பிரதமர் வாஜ்பாயும் வேறுகேட்டைத்தான் பயன்படுத்துவது வழக்கம்.
இதனால் மற்ற கேட்டுகளில் கொடுக்கப்பட்டதைவிட 12ம் எண் கேட்டில் பாதுகாப்பு குறைவாகவேகொடுக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த வழியாக நாடாளுமன்றத்துக்குள் புகுந்து விடலாம் என்று தீவிரவாதிகள்நினைத்துள்ளனர்.
இதனால் மெயின் கேட் வழியாக தீவிரவாதிகள் புகுந்த போதிலும் 12ம் எண் கேட்டை நெருங்கும் வரை யார் மீதும்அவர்கள் தாக்குதலை நடத்தவில்லை. இந்த கேட்டை அடைந்தவுடன்தான் தங்களைத் தடுத்த பெண் போலீசாரைஅவர்கள் முதன் முதலில் சுட்டுக் கொன்றனர்.
இந்த வழியாக எளிதில் கட்டடத்துக்குள் புகுந்து ராஜ்யசபாவில் உரையாற்றும் வாஜ்பாயைத் தாக்க வேண்டும் என்றுஅவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் அதற்குள் பாதுகாப்புப் படையினர் முழு வேகத்தில் செயல்பட்டு, தீவிரவாதிகளை உள்ளே செல்ல விடாமல்தடுத்து, வெளியிலேயே சுட்டுக் கொன்று விட்டனர்.
12ம் எண் கேட்டில் நிச்சயம் பாதுகாப்பு குறைவாகத்தான் இருக்கும் என்று தீவிரவாதிகளுக்கு நன்றாகத்தெரிந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் உள்ள இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி தீவிரவாதிகளுக்குத் தெரிந்தது என்றுதான்இப்போது பாதுகாப்பு அதிகாரிகள் குழம்பிப் போயுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications