சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் சமூக விரோதிகள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதியைசென்னை நகருக்கு வெளியே மாற்ற வேண்டும் எனக்கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் நடந்த மோதலில், போலீசார் சட்டக்கல்லூரியில் நுழைந்துமாணவர்களை தாக்கினர். இந்த தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் மாணவர்கள் விடுதியை மாற்ற வேண்டும் எனக்கோரி நிக்கல் பெர்னாண்டோ என்பவர் மனு தாக்கல்செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதியில் மாணவர்கள் என்ற பெயரில் பல சமூக விரோதிகளும் தங்கியுள்ளனர்.அவர்களால் அச்சாலையில் பொது மக்கள் நடமாட முடியவில்லை.

அந்த அளவுக்கு அந்த மாணவர்கள் அட்டூழியம் செய்கின்றனர். அவர்களால் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்.எனவே பொது நலனை மனதில் வைத்து , சட்டக்கல்லூரி விடுதியை நகருக்கு வெளியே மாற்றி உத்தரவிடவேண்டும்என்று அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+