கொல்லப்பட்ட 5 தீவிரவாதிகளும் பாகிஸ்தானியர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தி, கொல்லப்பட்ட 5 தீவிரவாதிகளுமே பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றுஸ்ரீநகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்துக்குள் புகுந்த ஆறு தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் கடுமையான தாக்குதல்நடத்த ஆரம்பித்தனர்.

பிரதமர் வாஜ்பாய் உள்பட பல இந்தியத் தலைவர்களைக் கடத்திச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் நாடாளுமன்றத்தில் இருந்த பாதுகாப்புப் படையினர் உடனடியாகப் பதில் தாக்குதல் நடத்தி, ஐந்துதீவிரவாதிகளை நாடாளுமன்ற வளாகத்திலேயே சுட்டுக் கொன்றுவிட்டனர். மற்றொருவன் தப்பிவிட்டான்.

இவர்களில் இரண்டு பேர் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காஷ்மீரில் செயல்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கார்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-ஏ-முகமது ஆகியஅமைப்பினர்தான் இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்து தீவிரவாதிகளுமே பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றுஸ்ரீநகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+