ஜஸ்வந்த் சிங்குடன் காலின் பாவல் பேச்சு
வாஷிங்டன்:
தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்த ஆரம்பித்துள்ளது.
மேலும் பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி தரப்படும் எனவும் கூறியுள்ளனர். இதையடுத்து இந்தியவெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்குடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் நேற்றுமாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானை நாங்கள் வலியுறுத்தப் போகிறோம் எனஉறுதியளித்தார்.
இந் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் பெளச்சர் கூறுகையில்,
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை அந் நாட்டுக்குஉள்ளது.
பாகிஸ்தான் அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் பேச்சு நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தைஒழிக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதன் அண்டை நாடான பாகிஸ்தானிலும் தீவிரவாதிகளைஒழித்துக் கட்ட வேண்டியதன் அவசியத்தை அமெரிக்கா உணர்ந்துள்ளது.
பாகிஸ்தான் அரசு தனது கடமையை உணர்ந்து செயல்படும் என நம்புகிறோம். இந்திய அமைச்சர் ஜஸ்வந்த்சிங்குடன் காலின்பாவல் பேசியுள்ளார். இந்தியா, பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதர்களுடனும் பேச்சுநடத்தியுள்ளார்.
இச் சம்பவம் குறித்து இந்தியா முழுமையாக விசாரிக்க வேண்டும். தனது மக்களையும், ஜனநாயகத்தையும் காக்கும்உரிமை இந்தியாவுக்கு உள்ளது. அதற்குத் தேவையான நடவடிக்கைளையும் இந்தியா எடுக்க உரிமை உண்டுஎன்றார்.
ரிச்சர்ட் பெளன்சரின் இந்தப் பேச்சு தனது பாகிஸ்தான் ஆதரவு நிலையில் இருந்து அமெரிக்கா கொஞ்சம் இறங்கிவந்திருப்பதைக் காட்டுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications