ஈரோடு: மனைவிக்கு மறுமணம் செய்து வைத்த கணவன்
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஒருவர் தன் மனைவிக்கு அவருடைய காதலனையே மறுமணம்செய்துவைத்த நிகழ்ச்சி நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொமாரபாளையத்தில் உள்ள கோட்டைமேடு என்ற இடத்தைச் சேர்ந்த சித்ரா(18)என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பாபு (25) என்ற மில் தொழிலாளிக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்திருமணம் நடந்தது.
திருமணத்திற்குப் பிறகு இந்தத் தம்பதிகளிடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருந்து வந்துள்ளன.
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த முருகன் (19) என்பவருடன் சித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அதுகாதலாகவும் மாறியது.
அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பாபுவுடன் வாழ்வதைவிட, தன்னை மதித்து பாசம் காட்டும்முருகனுடன் வாழ்வதே மேல் என்று கருதினார் சித்ரா.
இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் அவர் முருகனுடன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ளநெட்ட செல்லாபாளையம் என்ற ஊருக்கு வந்து விட்டார்.
அங்குள்ள ஒரு விசைத்தறிக் கூடத்தில் இருவரும் வேலை பார்த்து வந்தனர். இதற்கிடையே விசைத்தறிக் கூடத்தின்முதலாளி துரைசாமிக்கு இவர்களுடைய காதல் விவகாரம் தெரிய வந்தது. இதையடுத்து அவர் பாபுவுக்குத் தகவல்கொடுத்து, அவரை வரவழைத்தார்.
சித்ரா செய்த தவறை மன்னித்து ஏற்றுக் கொள்கிறேன் என்று பாபு கூறியுள்ளார். ஆனால் சித்ரா அவருடன் வாழமறுத்துவிட்டார்.
இதையடுத்து, பெருந்துறை ஊராட்சி ஒன்றியத் தலைவரிடம் பிரச்சனை எடுத்துச் செல்லப்பட்டது. அவர் இந்தமூன்று பேரிடமும் விசாரணை நடத்தினார்.
வரதட்சணை கேட்டு பாபு தன்னை அடித்து கொடுமைப் படுத்தியதால்தான், அவரை விட்டுவிட்டு முருகனுடன் ஓடிவந்ததாக சித்ரா கூறியுள்ளார். முருகனும் சித்ராவை முழு மனதுடன் ஏற்றுக் கொள்வதாகக் கூறினார்.
இதையடுத்து ஊராட்சி மன்றப் பிரதிநிதிகள் முன்னிலையில், பாபுவே முன் நின்று சித்ரா-முருகன் திருமணத்தைநடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்திய பிறகு, அவர் சென்று விட்டார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications