பிள்ளையார் சிலைகளுக்கு செருப்பு மாலை: பழனியில் பதட்டம்
பழனி:
பழனியில் பிள்ளையார்சிலைகளுக்கு யாரோ செருப்பு மாலைகளை அணிவித்ததையடுத்து, அங்கு பெரும்பதட்டமும் பரபரப்பும் நிலவி வருகிறது.
பழனி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அரசமர பிள்ளையார் சிலைக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை)அதிகாலை யாரோ செருப்பு மாலையை வீசி விட்டுச் சென்றுள்ளனர்.
அருகில் கிடந்த ஒரு சிகரெட் அட்டையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று வாசகம்எழுதப்பட்டிருந்தது.
இது தவிர, பழனியின் பல்வேறு இடங்களிலும் உள்ள பிள்ளையார் சிலைகளுக்கும் செருப்பு மாலைகள்அணிவிக்கப்பட்டிருந்தன.
"தமிழக அரசே, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடை செய்; இல்லையேல் பழனியைக் குண்டு வைத்துத் தகர்ப்போம்"என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் அந்தச் சிலைகளைச் சுற்றிக் கிடந்தன.
இதையடுத்து, பழனி நகரப் பொதுமக்கள் திரண்டு வந்து இச்சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் இறங்கினர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்கள், மசூதிகள் மற்றும் சர்ச்சுகளுக்கு பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
பிள்ளையார் சிலைகளுக்கு யார் செருப்பு மாலைகளை அணிவித்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications