அமெரிக்காவின் அறிவுரையும், உதவியும் தேவையில்லை: வாஜ்பாய்
டெல்லி:
தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட யாருடைய உதவியும் இந்தியாவுக்குத் தேவையில்லை, அமெரிக்காவின்அறிவுரைகளும் இந்தியாவுக்குத் தேவையில்லை என பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
கார்கில் ஊடுருவலின்போது பாகிஸ்தானுடன் கிட்டத்தட்ட போர் தான் நடத்தினோம். அந்த பதிலடித் தாக்குதலைநாம் நடத்தியிருக்காவிட்டால் நாட்டுக்கு பெரும் தீங்கு நேர்ந்திருக்கும். இப்போது மீண்டும் பெரிய அளவிலானபோருக்கு தேசம் தள்ளப்பட்டால் என்ன செய்ய முடியும்?. எதையும், யாரையும் சமாளிக்கும் திறனும் பலமும்இந்தியாவுக்கு உண்டு.
நாம் அமைதியாக இருக்க வேண்டும் என சில நாடுகள் அறிவுரை கூறுகின்றன. அவர்கள் அறிவுரை கூறவேண்டியது நமக்கல்ல. நமது அண்டை நாட்டுக்குத் தான். தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட யாருடையஉதவியையும் இந்தியா எதிர்பார்க்கவில்லை.
ஆனால், அதே நேரத்தில் சர்வதேச அளவில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதாகக் கூறிக் கொள்ளும் சிலநாடுகள் இந்தியா மீதான தாக்குதை கண்டுகொள்ளாமல் இருப்பது அவர்கள் இரட்டை வேடம் போடுவதைத் தான்காட்டுகிறது.
இந்தியா மீது இப்படி ஒரு தாக்குதல் நடத்தினால் என்ன நடக்கும் என்பது பாகிஸ்தானுக்குத் தெரியும். எல்லாம்தெரிந்து தான் அவர்கள் இத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் எதிர்பார்ப்பதைவிட மிக மோசமான வகையில் நமது பதிலடி இருக்கும் என்பதை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications