சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த 3 பேர் கைது
பெங்களூர்:
போலி பாஸ்போர்ட் மூலம் பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பிய சென்னை பாஸ்போர்ட் ஏஜென்ஸி உரிமையாளர்உள்பட 3 பேரை பெங்களூர் போலீசார் சென்னையில் கைது செய்தனர்.
டிசம்பர் 1ம் தேதி இரவு பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல் நகருக்குராமநாதபுரம் தாமஸ் அந்தோணி ராஜ் என்பவரின் பெயருடைய பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு குஜராத்தில்உள்ள தங்கவாரா கிராமத்தை சேர்ந்த பாபு பாய் பாட்டீல் சென்றுள்ளார்.
அமெரிக்க பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு அந்த பாஸ்போர்ட் போலியானது என்று தெரிய வந்தது. இது பற்றிபெங்களுர் பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தகவலை அடுத்து போலி பாஸ்போர்ட் கும்பலை பிடிக்க பெங்களூர் நகர குற்றத் தடுப்பு ஏ.சி.பி. கிருஷ்ணப்பாதலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அப்படை மூன்றாக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு, குஜராத், மும்பைக்குதனித்தனியாக அனுப்பப்பட்டது.
தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட போலீசார் சென்னை, திருச்சி நகரங்களில் போலி பாஸ்போர்ட் குறித்து ரகசியமாகவிசாரணை நடத்தினர். அப்போது சென்னை தம்பு செட்டி தெருவில் உள்ள ஜெ.ஆர்.கே. ஏஜென்சி என்ற நிறுவனம்போலி பாஸ்போர்ட் தயாரித்து விநியோகம் செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஏஜென்சி உரிமையாளர் ஜான்சன் என்ற ரவி (45), ஊழியர்கள் மாணிக்கம்(40), அனுகபூர் ராஜ்(43) கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 9 போலி பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட 3 பேரும் போலி பாஸ்போர்ட்கள் மூலம் மலேசியா, சிங்கப்பூர், பாங்காக் மற்றும் அரபுநாடுகளுக்கு பலரை அனுப்பியுள்ளனர்.
இந்த கும்பலின் தலைவனான மும்பையை சேர்ந்த அபர்பாய் ராஜூபாயை கைது செய்ய மும்பையில் போலீசார்முகாமிட்டுள்ளனர்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications