கண்ணகி சிலை அகற்றம்: கல்லூரி மாணவர்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கண்ணகி சிலை அகற்றப்பட்டதையடுத்து கோவையிலும் கல்லூரி மாணவர்கள் இன்று (வியாழக்கிழமை)போராட்டம் நடத்தினர்.
சென்னை மெரீனாவில் இருந்த கண்ணகி சிலை சமீபத்தில் அகற்றப்பட்டு, மியூசியத்தில் வைக்கப்பட்டது.
இதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் கோவையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். கண்ணகி சிலையை மெரீனாவிலேயேமீண்டும் கொண்டு வந்து வைக்க வேண்டும் என்று கோரி அம்மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் சுமார் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே, கண்ணகி சிலை அகற்றப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட பொதுநலன் மனு மீதான விசாரணை நாளை வருகிறது.












Click it and Unblock the Notifications