இந்திய ராணுவமும் குவிப்பு: எல்லையில் பதற்றம் அதிகரிக்கிறது
ஜம்மூ:
காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து ராணுவத்தினரையும் ஆயுதங்களையும் குவித்து வருவதால்,இந்தியாவும் கூடுதல் படைகளைக் குவிக்க ஆரம்பித்துள்ளது.
இதனால் எல்லையில் பதற்றம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலும் சர்வதேசஎல்லைப் பகுதியும் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது.
எதற்கும் தயார் நிலையில் இருக்குமாறு இந்தியப் படைகளுக்கு உத்தரவு பறந்துள்ளது.
கார்கிலை மீண்டும் தாக்கத் திட்டம்:
தீவிரவாதிகளின் உதவியுடன் கார்கிலை மீண்டும் தாக்க பாகிஸ்தான் தயாராகி வருவதாகவும் இந்திய ராணுவம்கருதுகிறது. முதலில் பூஞ்ச், ரஜெளரி ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்திவிட்டு பின்னர் கார்கிலைத் தாக்கபாகிஸ்தான் முயல்கிறது.
இத் தாக்குதல்களை தீவிரவாதிகளைக் கொண்டே நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு கார்கில் பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் ஊடுருவினர். அவர்களை இந்திய ராணுவம்விரட்டியடித்தது. அந்த ஊடுருவலை அப்போது பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப் தான்திட்டமிட்டு நடத்தினார்.
இப்போது தானே அதிபராகிவிட்ட நிலையில் மீண்டும் இந்தப் பகுதியைத் தாக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக கார்கிலில் வசிக்கும் ஷியா இனத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாதஇயக்கங்களில் சேரச் செய்யும் முயற்சிகளில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இங்குள்ள சிறியமதரஸாக்களில் (இஸ்லாமிய பள்ளிகள்) பாகிஸ்தான் ஆதரவு போதனைகள் போதிக்கப்பட்டு வருவதையும்ராணுவம் கண்டறிந்துள்ளது.
சமீபத்தில் இந்தப் பகுதியில் பெரும் அளவிலான பாகிஸ்தான் ஆயுதங்களும் கைப்பற்ற்றப்பட்டன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications