மேம்பால ஊழல்: எனக்கு ஒன்றும் ஆகாது - கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசு தொடரவுள்ள வழக்குகள் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, கொள்ளை அடித்தவர்களே தப்பித்துகொள்ளும்போது எனக்கு ஒன்றும் ஆகாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவகத்தில் கருணாநிதி நேற்று ( வியாழக்கிழமை)நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கேள்வி: மேம்பால ஊழல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.சி.ஐ.டி.கூடுதல் டி.ஜி.பியான ரவீந்திரன கூறியுள்ளாரே?
பதில்: இருக்கட்டுமே.
கேள்வி: வழக்கில் நீங்கள் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்று கூறியுள்ளாரே?
பதில்: கொள்ளை அடித்தவர்களே தப்பித்து கொள்கின்றனர். எனக்கு ஒன்றும் ஆகாது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications