லண்டன் சென்ற இந்தியக் கப்பலில் தீவிரவாதிகள்??
லண்டன்:
இங்கிலாந்துக்குச் சென்று கொண்டிருந்த இந்தியருக்குச் சொந்தமான சரக்குக் கப்பலில் பின்லேடனின்அல்-கொய்தா தீவிரவாதிகள் வெடி மருந்து மற்றும் ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாக்களுடன் வந்து கொண்டிருப்பதாகபுகார் கூறப்பட்டதையடுத்து அக் கப்பல் நடுக் கடலிலேயே தடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது.
பிரிட்டனின் தீவிரவாத எதிர்ப்புப் போலீஸ் படையினரும் கடற்படையினரும் இந்தக் கப்பலை இங்கிலீஷ் சேனலில்தடுத்து நிறுத்தினர். கரையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் இருந்தபோதே இக் கப்பல் தடுக்கப்பட்டு சோதனைநடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் வெடிமருந்தோ, ஆந்த்ராக்ஸோ சிக்கவில்லை.
கப்பல் இந்தியாவைச் சேர்ந்தது:
எம்.வி. நிஷா என்ற இந்தக் கப்பல் மும்பையைச் சேர்ந்த கிரேட் ஈஸ்ட்டர்ன் ஷிப்பிங் கம்பெனி என்றநிறுவனத்துக்கு சொந்தமானது. மொரீஷியசில் இருந்து சர்க்கரையை ஏற்றிக் கொண்டு கிழக்கு லண்டனின்சில்வர்டவுனில் தேம்ஸ் நதிக் கரையில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு சென்று கொண்டிருந்தது.
இந்தக் கப்பலின் உரிமையாளரான சுதிர் முல்ஜி கூறுகையில், சமீபத்தில் இந்தக் கப்பல் சோமாலியாவின் அருகேஉள்ள டிஜிபெளடிக்கும் சென்றது. அங்கு அமெரிக்கா அனுப்பிய உணவுப் பொருள்களை இறக்கிவிட்டு வந்தது.பின்னர் அது மொரீஷியசுக்குச் சென்று சர்க்கரையை ஏற்றிக் கொண்டு லண்டனுக்குச் சென்று கொண்டிருந்ததுஎன்றார்.
சோமாலியாவிலும் டிஜிபெளட்டியிலும் அல்-கொய்தா தீவிரவாதிகள் பெரும் அளவில் உள்ளனர். இதனால், இந்தக்கப்பலில் தீவிரவாதிகள் ஏறியிருக்கலாம் என இங்கிலாந்து ளவுப் படையினர் கருதுகின்றனர்.
கப்பலில் உள்ள இந்திய கேப்டன் மற்றும் ஊழியர்களிடம் நடுக் கடலில் லண்டன் போலீசார் விசாரித்துவருகின்றனர். அவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக போலீசார் கூறியுள்ளன்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications