தமிழகத்திலிருந்து எல்லைப் பகுதிக்கு ரயில் மூலம் செல்லும் வீரர்கள், ஆயுதங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவம் தொடர்ந்து குவிக்கப்பட்டுக்கொண்டிருப்பதையடுத்து, தமிழகத்திலிருந்தும் விசேஷ ரயில்கள் மூலம் வீரர்களும் ஆயுதங்களும்அனுப்படுகின்றனர்.

முதலில் காஷ்மீர் எல்லைப் பகுதியில் மட்டும்தான் இரு தரப்பிலும் வீரர்கள் குவிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்.

பின்னர் படிப்படியாக பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் எல்லைப் பகுதிகளிலும் பாகிஸ்தான் வீரர்கள் நவீனஆயுதங்களுடன் குவிக்கப்பட்டதையடுத்து, இந்திய வீரர்களும் அப்பகுதிகளில் நிறைய ஆரம்பித்துள்ளனர்.

எல்லைப் பகுதிகளில் உள்ள கிராம மக்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்து வருகின்றனர்.

இதற்கிடையே இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து எல்லைப் பகுதிகளுக்கு ராணுவ வீரர்கள் அனுப்பட்டுவருகின்றனர்.

சமீபத்தில் ஹைதராபாத்திலிருந்தும் பெங்களூரிலிருந்தும் விசேஷ ரயில்கள் மூலம் ராணுவ வீரர்கள்அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்திலிருந்தும் ராணுவ வீரர்கள் எல்லைப் பகுதிக்குப் புறப்படத் தயாராக உள்ளனர். அவர்கள்விரைவில் விசேஷ ரயில்கள் மூலம் கிளம்புவார்கள் என்று ராணுவ உயரதிகாரிகள் கூறினர்.

ஆனால் கோயம்புத்தூரிலிருந்து நேற்று (சனிக்கிழமை) காலையிலேயே 500 ராணுவ வீரர்கள் தனி ரயில் மூலம்ராஜஸ்தான் எல்லைப் பகுதிக்குக் கிளம்பிவிட்டனர்.

சென்னை ஆவடியிலிருந்து ராணுவத் தளவாடங்களை எடுத்துச் செல்லும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பீரங்கிகள், டிரக்குகள், ஜீப்புகள், ஆம்புலன்சுகள் போன்றவை உள்பட ராணுவத் தளவாடங்கள் எடுத்துச்செல்லப்படவுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+