பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் விடுமுறைகள் ரத்து: உடனே பணிக்குத் திரும்ப உத்தரவு
இஸ்லாமாபாத்:
விடுமுறையில் இருக்கும் அனைத்து வீரர்களையும் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு பாகிஸ்தான் ராணுவம்உத்தரவிட்டுள்ளது.
முதலில் பாகிஸ்தான் தான் காஷ்மீர் எல்லையில் படைகளை குவித்தது. இதையடுத்து இந்தியா தனது படைகளைபஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், காஷ்மீர் எல்லைகளில் குவித்து வருகிறது.
படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், எந்த நேரமும் எதையும் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் இந்தியபாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், வெளயுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோர் கூறியுள்ளனர்.
இதையடுத்து அனைத்து ராணுவ வீரர்களும் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும், இல்லாவிட்டால்கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாகிஸ்தான் ராணுவம் அவசர பிரகடனம் செய்துள்ளது.
டாங்கிகள், கவச வாகனங்கள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களை பாகிஸ்தான் எல்லைக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளது.
அதே போல காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலும் பாகிஸ்தான் ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது.
1979ம் ஆண்டுக்குப் பின் பாகிஸ்தான் ராணுவம் தனது நாட்டின் இரு எல்லைகளிலும் பிரச்சனைகளை சந்தித்துவருகிறது. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ஆதரவு தலிபான் அரசு கவிழ்க்கப்பட்டுவிட்டது. அங்கு இந்திய ஆதரவுநார்த்தர்ன் அலையன்ஸ் ராணுவத்தின் உதவியுடன் புதிய அரசு ஆட்சிக்கு வந்துள்ளது.
மேலும், பின்லேடன் பாகிஸ்தான் ஊடுருவி விடாமல் தடுக்க வேண்டிய கடமையையும் பாகிஸ்தான் ராணுவத்தின்தலையில் அமெரிக்கா போட்டுள்ளது. இதனால் தூரந்த் லைன் எனப்படும் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தனது ராணுவத்தை பாகிஸ்தான் குவித்துள்ளது.
இந் நிலையில் இந்தியா தாக்கும் என்ற அச்சமும் பரவியுள்ளால், இந்திய எல்லையிலும் தனது ராணுவத்தை தயார்நிலையில் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 1979ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானுக்குள் ரஷ்ய ராணுவம்நுழைந்தபோது இதே போன்ற இரு பக்க நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications