திண்டுக்கல் அருகே எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது.
திண்டுக்கல் அருகே உள்ள ஏ. வெள்ளோடு கிராமத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆருக்கு சிலைவைக்கப்பட்டது. இந்த சிலை சிமெண்ட்டினால் செய்யப்பட்டிருந்தது.
ஆண்டு தோறும் எம.ஜி.ஆர். பிறந்த தினம் மற்றும் நினைவு தினத்தன்று, அப்பகுதி பொதுமக்கள் இச்சிலைக்குஅஞ்சலி செலுத்துவது வழக்கம்.
இந்த ஆண்டும் அவரது நினைவு தினத்தை ஒட்டி, வெள்ளையடிப்பதற்காக அதிமுக பிரமுகர் ஆரோக்கியம் சிலைஇருந்த இடத்திற்கு சென்றார். அப்போது சிலையின் கைவிரல்களில் ஒன்றும், வலது பக்க நெஞ்சு பகுதியும் கல் வீசிஉடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் சிலை உடைக்கப்பட்டு இருக்கும் செய்தி கேட்டு மக்கள் கூடினர். இதனால்அந்த இடம் சிறிது நேரத்துக்கு பரபரப்புடன் காணப்பட்டது.
பிறகு சிலை உடைந்து கிடப்பது குறித்து அம்பாதுரை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு கூடியிருந்த பொதுமக்களும் சிலையை உடைத்தவர்களை கண்டு பிடிக்காவிட்டால் போராட்டத்தில்ஈடுபடுவோம் என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.
சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதர்களைப் பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications