எல்லையில் போர் விமானங்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

எல்லைப் பகுதியில் இதுவரை ராணுவத்தினரையும் ஆயுதங்களையும் குவித்து வந்த பாகிஸ்தான் இப்போதுஏவுகணைகளையும் போர் விமானங்களையும் எல்லைக்கு அருகில் உள்ள தளங்களுக்கு அனுப்பஆரம்பித்துள்ளது.

இதையடுத்து இந்தியாவும் கூடுதல் போர் விமானங்களை எல்லைக்கு அருகே கொண்டு சென்றுள்ளது. குறிப்பாகராஜஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள விமானப் படைத் தளங்களில் இந்திய தாக்குதல் விமானங்கள் அதிகஅளவில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கடந்த 48 மணி நேரத்தில் பாகிஸ்தான் தனது ஷகீன், கோரி ஆகிய ரகங்களைச் சேர்ந்த ஏவுகணைகளை எல்லைக்குஅருகே கொண்டு வந்துள்ளது. இவை அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் மிக்கவை.

பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்த் மாகாணங்களின் கண்டோன்மென்ட்களில் இருந்த ரிசர்வ் படைகள் எல்லைக்குஅனுப்பப்பட்டுள்ளன. இவை தவிர மங்கா, முல்தான் ஆகிய இடங்களில் நிலை கொண்டிருந்த பாகிஸ்தான்ராணுவத்தின் தாக்குதல் படைகளும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை நோக்கி செல்லுமாறுஉத்தரவிடப்பட்டுள்ளன.

அதே போல பாகிஸ்தானின் கடற்படையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந் நாட்டின்பி-3 ஓரியன் ரக கண்காணிப்பு விமானங்கள் கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது.

பாகிஸ்தானின் எப்-16 ரக அமெரிக்க விமானங்கள் எல்லை அருகே கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தவிமானங்களைக் கொண்டு இந்திய ரேடார்களை செயலிழக்கச் செய்ய முடியும். பாகிஸ்தானிடம் 350 தாக்குதல்விமானங்கள் உள்ளன.

இந்த விமானங்களை இந்தியாவின் மிக்-29 ரக ரஷ்ய விமானங்கள் சமாளித்துவிட முடியும். இந்தியாவிடம் 800தாக்குதல் விமானங்கள் உள்ளன. இவை எல்லைப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இவை தவிர அதி நவீன போர் விமானங்களான மிராஜ்-2000, சுகோய்-30 எம்.கே. ஆகிய விமானங்களும்இந்தியாவிடம் உள்ளன.

இப்போது இந்தியப் படைகள் அதிக அளவில் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளதால், எந்த நேரத்திலும்பாகிஸ்தானுக்குள் அவை நுழைய முடியும் என பாகிஸ்தான் கருதுகிறது. அதே நேரத்தில் பஞ்சாபில் இந்தியப்படைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக பாகிஸ்தான் கருதுகிறது. இதனால், காஷ்மீரில் இந்தியாதாக்குனால் பஞ்சாபில் இந்தியாவைத் தாக்க பாகிஸ்தான் திட்டமிட்டு வருகிறது.

இதையடுத்து பஞ்சாப், ராஜஸ்தானில் உள்ள விமானத் தளங்களில் போர் விமானங்களின் எண்ணிக்கையைஇந்தியா அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+