விபூதி பூசுவது மூடப் பழக்கமா? - கருணாநிதிக்கு இந்து முன்னணி, சிவசேனா கண்டனம்
சென்னை:
விபூதி அணிவது மூடப்பழக்கம் என்று கருணாநிதி கூறியதை தமிழ்நாடு சிவசேனா மற்றும் இந்து முன்னணிஅமைப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன.
திமுக தலைவர் கருணாநிதி சமீபத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளிக்கும் போது, விபூதி அணிவது மூடப்பழக்கம்என்று குறிப்பிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியைச் சேர்ந்த குமாரசாமி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:
கருணாநிதி இந்து மதத்திற்கு எதிராக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மருத்துவ குணம் கொண்ட திருநீரை நெற்றியில் பூசுவதன் மூலம் துர்நீர் அகற்றப்படுகிறது. இந்துக்கள் பின்பற்றும்ஒவ்வொரு பழக்க வழக்கமும் விஞ்ஞான பூர்வமானது.
பாஜக மீது இவருக்கு கோபம் இருந்தால் அவர்களைப் பற்றிப் பேசுவதற்கு கருணாநிதிக்கு உரிமை இருக்கிறது.ஆனால் கோடானு கோடி இந்துக்களின் பழக்கவழக்கத்தை விமர்சிப்பதற்கு அவருக்கு உரிமை இல்லை.
கருணாநிதி கூறியதற்கு அவர் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் இந்து விரோதி கருணாநிதிஎன்று கூறி தமிழகம் முழுவதும் சிவசேனா போராட்டம் நடத்தும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்குமாரசாமி ராஜா.
இந்து முன்னணி அமைப்பும் கருணாநிதிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநில பிள்ளையார் சதுர்த்திஒருங்கிணைப்பாளரான வி. முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தன் அரசியல் வாழ்க்கை அஸ்தமித்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்திலாவது இந்துக்கள் மனதைபுண்படுத்தாமல் அரசியல் நடத்தும் பண்பை கருணாநிதி கற்றுக் கொள்ள வேண்டும்.
இதற்காக தினமும் அவர் ஒரு மணி நேரமாவது ஜெயலலிதாவிடம் பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும் என்றுஅவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications