பாகிஸ்தான் விமானங்கள் இந்தியா மீது பறக்கத் தடை வரும்?
டெல்லி:
பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க தேசிய பாதுகாப்புக்கான கேபினட்கமிட்டியின் கூட்டம் இன்று (புதன்கிழமை) கூடியது.
இக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் உள்பட பல்வேறு அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள், உளவுப் படை அதிகாரிகள்இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், இமயமலையில் சியாச்சின் பகுதியில் உள்ள பாதுகாப்புஅமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசால் உடனடியாக டெல்லி வர முடியவில்லை.
அங்கு மிக மோசமான வானிலை நிலவுவதால், ஹெலிகாப்டர் புறப்பட முடியவில்லை. இதனால், அவர் டெல்லிவருவது தாமதமாகிவிட்டது. அவர் வந்தவுடன் நாளை மீண்டும் பாதுகாப்புக் கமிட்டியின் கூட்டம் பிரதமரின்இல்லத்தில் கூடும்.
இன்று நடந்த கூட்டத்தில் இந்திய வான் பகுதியில் பாகிஸ்தானின் எந்த விமானமும் பறக்கக் கூடாது என தடைவிதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அதே போல இந்திய மற்றும் பாகிஸ்தான் தூதரகங்களில் உள்ள அலுவலர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும்முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்டஸ் ஆற்று நீரை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்வதில் இந்தியா இதுவரை விட்டுத் தரும் போக்கைகடைபிடித்தது. இனிமேல், சர்வதேச சட்டப்படி இந்தியாவுக்கு வர வேண்டிய நீரை கட்டாயம் வாங்கியே ஆவதுஎன மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆறுகளில் அணைகள் கட்டுவது போன்ற பணிகளில் இனிஇந்தியாவின் அனுமதியை பாகிஸ்தான் பெற வேண்டி வரும். இல்லாவிட்டால் சர்வதேச விதிகளின்படிதிட்டங்களுக்கான கடனுதவியை நிறுத்தச் செய்யுமாறு இந்தியாவால் கோர முடியும்.
பாகிஸ்தானுக்கு இந்திய வர்த்தகத்துறை கொடுத்திருந்த மிக முக்கியமான வர்த்தக நாடு என்ற அங்கீகாரத்தைநீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவை குறித்து இன்று நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நாளை மீண்டும் கூடும் இந்தக் கமிட்டியின்கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
பாகிஸ்தானுக்கு எந்தெந்த வகையில் தொல்லை தர முடியுமோ அனைத்து வகையிலும் பிரச்சனை தருவது என்றமுடிவுக்கு இந்தியா வந்துவிட்டது.
கார்கில் மற்றும் சியாச்சின் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்துவிட்டுத் திரும்பும் பெர்னாண்டஸ் இக் கூட்டத்தில்எல்லையில் நிலவி வரும் நிலவரம் குறித்து விளக்குவார்.
பாகிஸ்தானிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டுள்ள இந்தியத் தூதர் விஜய் கே. நம்பியாரும் இன்று நடந்தகூட்டத்தில் கலந்து கொண்டார். நாளையும் அவர் இக் கூட்டத்தில் பங்கேற்பார்.
நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு கடந்த 13 நாட்களில் 4வது முறையாக இக் கூட்டம் நடந்துள்ளது. நாளைநடப்பது 5வது கூட்டம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications