போர் வேண்டாம்: பாகிஸ்தான் மன்றாடல்
இஸ்லாமபாத்:
இந்தியாவுடன் நாங்கள் போரை விரும்பவில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. எல்லையில் நடத்தி வந்ததுப்பாக்கிச் சூட்டையும் குறைத்துக் கொண்டுள்ளது.
இதையடுத்து இந்தியா மிகக் கடும் நடவடிக்கைகளில் இறங்கியது. தூதரை திரும்ப அழைத்துவிட்டு ராணுவத்தைஎல்லையில் தயார்படுத்தி வருகிறது.
இந் நிலையில் இந்தியாவுடன் போரை விரும்பவில்லை என பாகிஸ்தான் இன்று அறிவித்துள்ளது. பாகிஸ்தானின்வெளியிறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அசிஸ் அகமத் கான் கூறுகையில்,
இந்தியாவுடன் அமைதியாகப் பேசித் தான் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறோம். ஆரம்பத்தில் இருந்தேபொறுமையைக் கடைபிடித்து வருகிறோம். இந்தியா தூண்டிவிட்டாலும் கூட நாங்கள் படைகளைக்குவிக்கவில்லை. ஏனெனில் அது இந்தப் பிராந்தியத்தில் அமைதியை கெடுத்துவிடும். போர் வேண்டாம் என்றுநினைக்கிறோம் என்றார்.
இந்தியா இவ்வளவு கடுமையான நடவடிக்கைளில் இறங்கும் என பாகிஸ்தான் எதிர்பார்க்கவில்லை என்றுதெரிகிறது. இதனால் தான் ஜெய்ஷ்-ஏ-முகம்மத் தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸாரை கைது செய்தது.
போரை விரும்பவில்லை என ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் பலமுறை கூறிவிட்டார். சீனாவுக்கு ஓடிஅவர்களின் உதவியைக் கேட்டுப் பார்த்தார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தாரும் போரை விரும்பவில்லை என்றார். இப்போது வெளியுறவுசெய்தித் தொடர்பாளர் மீண்டும் போர் வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
எல்லைக்கு அப்பால் இருந்து இந்தியப் படைகள் மீது நடத்தி வந்த கடும் தாக்குதலையும் இன்று மாலையில்பாகிஸ்தான் குறைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளது.
ஆனால், போரை இந்தியாவும் விரும்பவில்லை, அது நம் மீது திணிக்கப்பட்டு வருகிறது என பிரதமர் வாஜ்பாய்கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications