நிலக்கரி ஊழல் வழக்கு: ஜெயலலிதா விடுதலை
சென்னை:
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான ரூ.6.5 கோடி நிலக்கரி ஊழல் வழக்கிலிருந்து அவரைவிடுவித்து சென்னை தனி நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பளித்தது.
கடந்த அதிமுக ஆட்சியில் நிலக்கரி இறக்குமதியில் ஜெயலலிதா ஊழல் செய்ததால் அரசுக்கு ரூ.6.50 கோடி இழப்புஏற்பட்டதாகவும் தனி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து வந்தது.
ஜூன் 1999ல் இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.ராதாகிருஷ்ணன் ஜெயலலிதாவை இந்தவழக்கு விசாரணையில் இருந்து விடுவித்தார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவழக்கிலும் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது சரிதான் என்று தீர்ப்பு வந்தது.
ஆனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவை மீண்டும் விசாரிக்க ஆணையிட்டது. இதையடுத்து சிறப்புநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடந்து வந்தது.
அனைத்து சாட்சிகளின் விசாரணையும் முடிந்துவிட்ட நிலையில் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்துஜெயலலிதா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து இன்று தீர்ப்பு வழங்கியது.
நிலக்கரி வாங்கியதில் ரூ.6.5 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லாததால்இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பத்து பேருமே விடுதலை செய்யப்படுவதாக வழக்கை விசாரித்த தனி நீதிமன்ற நீதிபதிஎஸ்.எஸ்.பி. தார்வேஸ் தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications