டோவ் ரக ஏவுகணைகளைக் குவிக்கும் பாகிஸ்தான்
ஜம்மூ:
காஷ்மீரில் இந்திய ராணுவ முகாம்களையும் பாலங்களையும் டோவ் ரக ஏவுகணைக் கொண்டு தாக்க பாகிஸ்தான்திட்டமிட்டுள்ளது.
வழக்கமாக இந்த ஏவுகணைகள் பீரங்கிகளைத் தாக்கத் தான் பயன்படுத்தப்படும். ஆனால், இதைக் கொண்டுவீரர்கள் நிறைந்த முகாம்களைத் தாக்கினால் பெரும் சேதம் ஏற்படும். அதே போல பாலங்களை இதைக் கொண்டுமுழுமையாக தகர்க்க முடியும்.
அக்னூர்-பலான்வாலா, சுந்தர்பன்ஜி, நெளசேரா, மேட்கர், பூஞ்ச், பாலகோட், கெர்னி ஆகிய இடங்களில் இந்தவாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியில் உள்ள பாலங்களைத் தகர்த்து இந்தியப் படைகளின் நடமாட்டத்தையும், ஆயுதங்கள் கொண்டுசெல்வதைத் தடுக்கவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
இந்த ஏவுகணைகளால் 800 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட இரும்பைக் கூட துளைத்துவிட முடியும். 3 முதல் 5கி.மீ. தொலைவில் இருந்து கொண்டு இந்த ஏவுகணையைச் செலுத்த முடியும்.
இதையடுத்து பாலங்களைச் சுற்றி பாதுகாப்பை இந்தியா பலப்படுத்தியுள்ளது. பாலங்கள் தகர்ந்தாலும் வேறுவழிகளில் படைகளையும் ஆயுதங்களையும் கொண்டு செல்ல வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இந்த ஏவுகணைகளைச் செலுத்தும் வாகனங்களை தாக்கும் ஆயுதங்களும் எதிர்-ஏவுகணைகளும்குவிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவிடம் உள்ள நாக் ரக ஏவுகணைக் கொண்டு பாகிஸ்தானின் டோவ் ஏவுகணை வாகனங்களை சிதறடிக்கமுடியும். எனவே, இவை எல்லைக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் இருந்து காஷ்மீருக்கு...:
இந் நிலையில் ஆப்கானிஸ்தானில் புதிதாக பிடிபட்ட பல பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் நார்த்தர்ன் அலையன்ஸ்படையினர் விசாரணை நடத்தியபோது, அவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து காஷமீருக்குள் நுழைய முயன்றுகொண்டிருப்பது தெரியவந்தது.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் ஹர்கத்-உல்-முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 30 தீவிரவாதிகள் நேற்றுபிடிபட்டனர். உடனடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதிக்கு வருமாறு தங்களுக்குபாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. உத்தரவிட்டுள்ளதாக இவர்கள் கூறினர்.
இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்காகத் தான் இவர்களை பாகிஸ்தான் அழைத்துள்ளது என்பதுதெரியவந்தவுடன் இக் கும்பலை நார்த்தர்ன் அலையன்ஸ் வீரர்கள் அடித்து உதைத்து இழுத்துச் சென்று சிறையில்அடைத்துள்ளனர்.
சுமார் 400 ஹர்கத்-உல்-முஜாகிதீன் தீவிரவாதிகள் பாகிஸ்தான் வழியாக காஷ்மீரில் நுழையத் திட்டமிட்டுள்ளதாகநார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் தெரிவித்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications