நெல்லையப்பர் கோவில் உண்டியல் கொள்ளை
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்குள் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை புகுந்துஉண்டியல்களை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற 4 மர்ம மனிதர்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.
திருநெல்வேலியில் உள்ளது புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவில். அங்கு இன்று அதிகாலை 4 மணிக்கு 4 மர்மமனிதர்கள் புகுந்தனர்.
கோவிலில் இருந்த 2 உண்டியல்களை உடைத்து, அவற்றிலிருந்த சில்லரைகளையும் பணத்தையும் அள்ளிக்கொண்டு ஓடினர்.
உண்டியல்களை உடைப்பதற்காக ஒரு வெல்டிங் மெஷினையும் அவர்கள் கொண்டு வந்திருந்தனர்.
சத்தம் கேட்டு ஓடிவந்த கோவில் காவலாளிகள், கொள்ளையர்களைத் துரத்தினர். ஆனால் அவர்களையும் மீறிகொள்ளைக்காரர்கள், திருடிய தொகையிலிருந்து சிறிது சில்லரைகளை மட்டும் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
தப்பி ஓடிய 4 பேரையும் பிடிக்கும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலியைச் சுற்றிலும் சமீப காலத்தில் அடிக்கடி பெரிய அளவிலான கொள்ளைச் சம்பவங்கள் நடந்துவருவதால், நெல்லை மாநகரம் கொள்ளை மாநகரமாக மாறி வருகிறது.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications