வீரப்பன் கும்பலுக்கு உதவிய 2 பேர் கைது: ரூ.1 லட்சம் பறிமுதல்
ஈரோடு:
சந்தனக் கடத்தல் வீரப்பன் கும்பலுக்கு உதவிய அவனுடைய நெருங்கிய கூட்டாளி சந்திர கவுண்டரின் தாயாரையும்சகோதரரையும் போலீசார் கைது செய்தனர்.
சந்தன கடத்தல் வீரப்பனின் நெருங்கிய கூட்டாளி சந்திர கவுண்டர் என்னும் சந்திரன். நேற்று (திங்கட்கிழமை)பங்களாப்புதூர் போலீசார் சந்திர கவுண்டரின் தாயார் சின்னம்மாள் வசித்து வரும் ஜாத்ரக்கோம்பை வீட்டில்சோதனை நடத்தினர்.
அதே போல் சந்திர கவுண்டர் அண்ணன் தங்கவேல் (43) வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில்500 ரூபாய் நோட்டுக்களாக ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக அவர்களை விசாரித்ததில் இந்த பணம் வீரப்பன் கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்ததையும்,உணவு பொருள்கள் சப்ளை செய்ததையும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
மேலும் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரத்திற்கு பின்னர் சந்திர கவுண்டர் மூலம் இந்தப் பணம்வந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதன் பிறகு இவர்களை கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். இவர்களை 15நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications