20 தீவிரவாதிகளின் பட்டியலை பாகிஸ்தானிடம் கொடுத்தது இந்தியா
டெல்லி:
லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகம்மது ஆகிய தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 20 தீவிரவாதிகள்மற்றும் குற்றவாளிகளின் பெயர்ப்பட்டியலை பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்துவிட்டது.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் துணைத் தூதர் ஜலீல் அப்பாஸ் ஜிலானியிடம் இந்தப் பட்டியல் இன்று(திங்கள்கிழமை) மாலை முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
ஜெய்ஷ்-ஏ-முகம்மது அமைப்பின் தலைவன் மெளலானா மசூத் அஸார், மும்பை ரவுடி தாவூத் இப்ராஹிம்ஆகியோர் இந்தப் பட்டியலில் முதன்மையாக இடம் பெற்றுள்ளனர்.
கடந்த 1993ல் மும்பையில் பல்வேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணமான டைகர்மேனன், சோட்டா ஷகீல், 1999ல் காண்டஹாருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்திய 5 தீவிரவாதிகள்ஆகியோரும் இந்தப் பட்டியலில் அடங்குவர்.
மேலும் லஷ்கர்-ஏ-தொய்பா, ஹர்கத்-உல்-முஜாகிதீன், ஹிஸ்புல் முஜாகிதீன், ஹர்கத்-உல்-ஜிகாத்-ஏ-இஸ்லாமி,காலிஸ்தான் விடுதலை முன்னணி போன்ற இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளின் பெயர்களும் அப்பட்டியலில்இடம் பெற்றுள்ளன.
லஷ்கர் அமைப்பு தலைவன் ஹபீஸ் முகம்மது சயீத் மற்றும் ஜெய்ஷ் அமைப்பின் தலைவன் மசூத் அஸார்ஆகியோரை பாகிஸ்தான் ஏற்கனவே கைது செய்துள்ளது. அஸாரை 90 நாள் சிறையிலடைக்கவும்உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த 20 தீவிரவாதிகளையும் இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தால் மட்டுமே இரு நாடுகளுக்கிடையேயானநல்லுறவைப் புதுப்பிக்க முடியும் என்று சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
முன்னதாக சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலிடமும் இந்தத் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் குறித்துதெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications