வாஜ்பாயுடன் புஷ் மீண்டும் டெலிபோனில் பேச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பாகிஸ்தான் ஆத்திரமூட்டினாலும் இந்தியா பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர்வாஜ்பாயை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கியதை அடுத்து இரு நாட்டு எல்லைகளிலும் பதட்டம்நீடிக்கிறது. மேலும் 20 பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒப்படைக்கும்படி இந்தியா பாகிஸ்தானிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின டெக்சாஸ் நகரில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வில் இருக்கும் புஷ்,தொலைபேசியில் வாஜ்பாயைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது. தீவிரவாதிகள் மீதுபாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காமல் இந்தியாவுக்கு ஆத்திரமூட்டினாலும் இந்தியா பொறுமையை கடைப் பிடிக்கவேண்டும்.

பாகிஸ்தான் அரசு தீவிரவாத அமைப்பின் சொத்துக்களை முடக்கியுள்ளது வரவேற்கத் தக்கது. இப்போது தீவிரவாதஅமைப்பின தலைவர்களையும் கைது செய்து வருகிறது.

எனவே இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்காமல் பொறுமையாக இருக்க வேண்டும் என்று வாஜ்பாயிடம்புஷ் கேட்டுக் கொண்டார்.

கடந்த 3 நாட்களில் 2 முறை புஷ்-வாஜ்பாய் டெலிபோன் பேச்சு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய-பாகிஸ்தான் பிரச்சனை பூதாகரமாக வளர்ந்தால் இதைப் பயன்படுத்திக் கொண்டு ஒசாமா பின் லேடன்தப்பித்து விடுவான் என்று அமெரிக்கா அஞ்சுகிறது.

பின் லேடன் தப்பித்து விடக் கூடாது என்ற நோக்கில் மட்டுமே சிந்தித்து வரும் அமெரிக்கா, காஷ்மீரில் பாகிஸ்தான்வளர்த்து வரும் தீவிரவாதத்தை அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது.

இவ்விஷயத்தில் அமெரிக்கா இன்னும் இந்தியாவை முழுமையாக ஆதரிக்காமலேயே பிடிகொடுக்காமல் பேசிவருகிறது.

ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்து பாகிஸ்தான் படைகள் இந்திய எல்லைக்கு நகர ஆரம்பித்தால் எப்படியும் பின்லேடன் தப்பி விடுவான் என்பதற்காகத்தான் அமெரிக்கா இவ்வளவு அஞ்சுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+