தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்
சென்னை:
இந்த ஆண்டும் (2002) வழக்கமான உற்சாகத்துடன் தமிழக மக்கள் புத்தாண்டைக் கொண்டாடினார்கள்.
நேற்று (திங்கள்கிழமை) நள்ளிரவு சரியாக 12 மணி அடித்ததுமே தமிழக மக்களிடையே உற்சாக வெள்ளம்கரைபுரண்டு ஓடத் தொடங்கியது.
பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் 2002ம் ஆண்டை தமிழக மக்கள் அன்புடன் வரவேற்றனர்.
நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று அனைவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிபுத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
இளைஞர்களின் உற்சாகத்தைக் கேட்கவும் வேண்டுமா? பைக்குகளை எடுத்துக் கொண்டு பறந்த இளைஞர்கள்,பெரும் கூக்குரலை எழுப்பி சாலையில் போவோருக்கும் வருவோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
இளைஞிகளையும் தொற்றிக் கொண்டது இந்தப் புத்தாண்டு உற்சாகம். ஆண்கள்-பெண்கள் பேதமில்லாமல் இந்தஇளம் பெண்களும் தங்களுடைய ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு பலத்த கரகோஷங்களுடன் புத்தாண்டுவாழ்த்துக்களைப் பறிமாறிக் கொண்டனர்.
பெரிய பெரிய ஓட்டல்களில் சிறப்பு புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இங்கு நேற்றுநள்ளிரவு 12 மணிக்கு முன்பே ஆடல், பாடல் என்று அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்த மக்கள், 2002 பிறந்ததும்ஆடிப் பாடித் தீர்த்து விட்டனர்.
"தண்ணி"யடித்து கலாட்டா செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார்எச்சரித்ததன் விளைவாக, இளைஞர்கள் இவ்விஷயத்தில் கொஞ்சம் அடக்கியே வாசித்தனர் (சத்தம் போடாமல்வீட்டுக்குள்ளேயே "வேலை"யை முடித்துக் கொண்டனர்).
வழக்கம்போல சாட்டிலைட் டி.விக்கள் இந்தப் புத்தாண்டுக்கும் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கலக்கிவிட்டன. சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும் திரைப்படங்களுக்கும் பஞ்சமே இல்லாமல் செய்து விட்டன.
இவ்வளவு களேபரங்களுக்கும் இடையில் கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள் அமைதியாகப்புத்தாண்டைக் கொண்டாடினர். இவர்கள் கோவில்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பெரிய கோவில்களிலும் நேற்று இரவு முதலே கோவில்களில் நல்ல கூட்டம்காணப்பட்டது. பிறந்துள்ள 2002ம் ஆண்டிற்கான சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டன.
கிருஸ்தவர்களுக்கு புத்தாண்டைக் கொண்டாடினால்தான் கிருஸ்துமஸ் முடிவுக்கு வரும். நேற்றிரவுதேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications