பாகிஸ்தானில் போர் எதிர்ப்பு பேரணி நடத்தியவர்களுக்கு அடி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் போருக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கு அடி-உதை விழுந்தது.

அஸ்மா ஜஹாங்கீர் தலைமையில் ஆயிரக்கணக்கான பெண்களும் ஆண்களும் பாகிஸ்தானின் லாகூர் நகரில்இருந்து இந்திய-பாகிஸ்தானின் வாஹா எல்லையருகே கூடினர். பஸ்களிலும் வேன்களிலும் இவர்கள் பேரணியாகவந்திருந்தனர்.

கைகளில் வெள்ளைக் கொடிகளுடன் அரசின் தீவிரவாதப் போக்கை கண்டித்து இவர்கள் பேரணி நடத்தவந்திருந்தனர்.

ஆனால், இவர்களை பாப்-இ-ஆஸாதி என்ற இடத்திலேயே தடுத்து நிறுத்திய பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப்படையினரான பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் அவர்களிடம் இருந்த வெள்ளைக் கொடிகளையும்,தீவிரவாதத்துக்கு எதிரான பேனர்களையும், அட்டைகளையும் பறித்து கிழித்து எறிந்தனர்.

பின்னர் அந்த மக்கள் மீது பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ்சும் போலீசாரும் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர்.அனைவரும் சிதறி ஓடினர்.

பேரணயில் வந்த பல பெண்களை போலீசார் கழுத்தைப் பிடித்து கீழே தள்ளி உதைத்தனர். போலீசாரின் தாக்குதலில்நிருபர்களும் தப்பவில்லை. அவர்களுக்கும் அடி விழுந்தது.

இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியே ரணகளமாகக் காணப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+