இடைத் தேர்தலில் திமுகவுக்கு பாஜக முழு ஆதரவு
சென்னை:
தமிழகத்தில் 3 தொகுதிகளில் நடக்கவுள்ள இடைத் தேர்தலில் திமுகவுக்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது.
பிப்ரவரி 21ம் தேதி ஆண்டிப்பட்டி, வாணியம்பாடி, சைதாப்பேட்டை தொகுதிகளில் இடைத் தேர்தல் நடக்கஉள்ளது. இந்த மூன்று தொகுதிகளிலும் அதிமுக-திமுக இரு கட்சிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக தலைவர் கருணாநிதியை வீட்டில் சந்தித்துபேசினார். திமுகவை இடைத் தேர்தலில் ஆதரிப்பதாக அறிவித்தார்.
இன்று கருணாநிதியை பா.ஜ.க. மாநிலப் பொது செயலாளர் இல.கணேசன் அவரது கோபாலபுரம் வீட்டில் சந்தித்துபேச்சு நடத்தினார். இந்த சந்திப்பு 45 நிமிடம் நீடித்தது.
சந்திப்பு முடிந்து வெளியில் வந்த கணேசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
கருணாநிதியை சந்தித்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது. மேலும் அவர் என்னிடம் தொலைபேசியில் அழைத்துசந்திக்க வேண்டும் என்றார். அதனால் தான் பார்க்க வந்தேன். நாங்கள் இடைத் தேர்தல் குறித்து பேசினோம். மூன்றுதொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுவதாக முடிவு செய்திருப்பதாக சொன்னார்.
இதற்கு முன்பு நடந்த தேர்தலிலும் அந்த தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் தான் போட்டியிட்டுள்ளனர்.அதனால் இப்போதும் அவர்கள் தான் அங்கு போட்டியிட வேண்டும். அது தான் நியாயம்.
இந்த மூன்று தொகுதிகளிலும் திமுகவை ஆதரிக்க உள்ளோம். திமுக வெற்றி பெறுவதற்கு பாஜக தீவிரமாகஉழைக்கும் என்றார்.
பா.ஜ.க-திமுக இடையே உறவில் விரிசல் விழுந்து வரும் நிலையில், இடைத் தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாகபா.ஜ.க. அறிவித்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications