தமிழகத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் போராட்டம்
சென்னை:
ஸ்டார் டிவி உள்ளிட்ட சாட்டிலைட் சானல்களின் சந்தா கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து சென்னையில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வியாழக்கிழமை முதல் இந்த சேனல்களின் ஒளிபரப்பை காலவைரயின்றி நிறுத்தி வைக்கப் போவதாக தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள்சங்கம் முதலில் வசனம் பேசியிருந்தது. ஆனால், இந்த இன்று இந்த சாட்டிலைட் சானல்களின் ஒளிபரப்பை அவர்கள் நிறுத்தவில்லை.அவை வழக்கம்போல் ஒளிபரப்பாயின.
ஸ்டார் டிவி உள்ளிட்ட பல்வேறு கட்டண சானல்களின் சந்தாக் கட்டணம் உயர்த்தப்படுள்ளது. ஆனால் இந்தக் கட்டண உயர்வை ஏற்கமுடியாது என்று தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அறிவித்துள்ளனர். இந்த கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில நாட்களுக்குமுன்பு ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்தினர். அன்று கட்டண சானல்களின் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பாமல் இருட்டடிப்புசெய்தனர்.
இந் நிலையில் வியாழக்கிழமை சன் கேபிள் விஷன் மூலமாக ஒளிபரப்பாகும் அனைத்து தனியார் சாட்டிலைட் சானல்களின்ஒளிபரப்பையும் நிறுத்த சங்கம் முடிவு செய்திருந்தது. இருப்பினும் வழக்கம் போலவே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.
இதுகுறித்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனவேநிகழ்ச்சிகள் வழக்கம் போல ஒளிபரப்பாகி வருகின்றன என்று கூறினர்.
இன்று மாலை வள்ளுவர் கோட்டம் அருகே நடத்தத் திட்டமிட்டுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் கேபிள் டிவிஆபரேட்டர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications