விபூதி விவகாரம்: கருணாநிதிக்கு பா.ஜ.க. எச்சரிக்கை
சென்னை:
விபூதி பூசுவதை மூட நம்பிக்கை என்று கூறி வருவதை திமுக தலைவர் கருணாநிதி நிறுத்திக் கொள்ளாவிட்டால்இந்துக்களின் ஓட்டுக்களை அவர் இழக்க நேரிடும் என்று தமிழக பாரதீய ஜனதாக் கட்சி கூறியுள்ளது.
விபூதி பூசுவது மூட நிம்பிக்கை என்று சமீபத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.இதற்கு தமிழகம் முழுவதிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்து முன்னணி, சிவசேனா ஆகிய அமைப்புகள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் தமிழக பாரதீய ஜனதாக்கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி ஏடான ஒரே நாடு பத்திரிக்கையில்கருணாநிதியை மறைமுகமாக கண்டித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஏட்டில், விபூதி பூசுவதை மூட நம்பிக்கை என்று வைத்துக் கொண்டால், இந்த நிவீன யுகத்தில் விபூதி பூசும்பழக்கம் அழிந்து போயிருக்க வேண்டும்.
ஆனால் உண்மையில், கல்லூரி மாணவர்கள் முதல் விபூதி பூசுவதை வழக்கமாக கொண்டிருப்பவர்களின்எண்ணிக்கை அதிக அளவில்தான் இருக்கிறது. அதிகரித்துக் கொண்டும் இருக்கிறது.
விபூதி பூசுவதை மூட நம்பிக்கை என்று கூறி பிரசாரம் செய்தவர்கள்தான் தோல்வியைத் தழுவியுள்ளார்கள்.
இந்துக்களின் அடையாளம் விபூதி. திராவிட கலாசாரத்தை பின்பற்றுவதாக கூறிக் கொண்டிருப்பவர்களில் பலர் கூடஇப்போது விபூதி பூசிக் கொண்டும், கோவில்களுக்குப் போய்க் கொண்டும் உள்ளனர்.
விபூதி பூசுவதை மூட நம்பிக்கை என்று கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தேர்தலில்இந்துக்களின் வாக்குகள் கிடைக்காமல் போய் விடக் கூடும் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications