இந்திய-பாகிஸ்தான் இடையே வித்தியாசமான விமான சண்டை
டெல்லி:
இந்தியா, பாகிஸ்தானில் உள்ள தங்கள் தூதரக அலுவலர்களை திரும்ப அழைத்து வர இரு நாடுகளும் ஒரு சிறப்புவிமானத்தை இயக்க உள்ளன.
அதே போல இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அலுவலர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கஇந்தியா உத்தரவிட்டது. இதையடுத்து இந்திய தூதரக அலுவலர்களின் எண்ணிக்கையையும் பாதியாகக் குறைக்கபாகிஸ்தான் உத்தரவிட்டது.
இதையடுத்து சுமார் 55 இந்திய தூதரக அதிகாரிகள் பாகிஸ்தானில் இருந்து திரும்ப வரவுள்ளனர். அதே போல 55பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இந்தியாவில் இருந்து அந் நாட்டுக்குத் திரும்பியாக வேண்டும்.
ஆனால், விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுவிட்டதால், இப்போது இரு நாடுகளுக்கும் இடையே விமானசர்வீஸ் இல்லை.
இதையடுத்து தங்கள் நாட்டுத் தூதரக அலுவலர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் திரும்ப அழைத்து வரபாகிஸ்தான் ஏர்லைன்சும், இந்தியன் ஏர்லைன்சும் தலா ஒரு சிறப்பு விமானத்தை இயக்க உள்ளன.
பாக். நஷ்டம்- 240 கோடி: இந்திய நஷ்டம்- 50 கோடி:
இந்தியா மீது பறக்க பாகிஸ்தான் விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதால் அந் நாட்டில் இருந்து கிழக்கு நோக்கிசெல்ல வேண்டிய விமானங்கள் கடலைக் கடந்தும், சீனா மீது பறந்தும் செல்ல வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளன. இதனால், பாகிஸ்தானுக்கு ஆண்டுக்கு ரூ. 240 கோடி கூடுதல் செலவாகும்.
அதே போல இந்தியாவில் இருந்து மேற்கு நோக்கி செல்ல வேண்டிய விமானங்கள் கடலைச் சுற்றிக் கொண்டு போகவேண்டியுள்ளதால் இந்தியாவுக்கு கூடுதலாக ரூ. 50 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த விமானப் பிரச்சனையால் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதில் கூட பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
டெல்லி-காபூல் இடையே ஈரான் விமானங்கள்:
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு விமானங்களை இயக்குவதில் பிரச்சனைஏற்பட்டுள்ளதால் ஈரான் விமானங்கள் மூலமாக இந்தப் பிரச்சனையைத் தீர்க்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலானவிமான சேவை ரத்து செய்யப்பட்டது. மீண்டும் இந்த சேவையைத் தொடங்க திட்டமிட்டபோது இந்தியவிமானங்கள் தன் நாட்டின் மீது பறக்க பாகிஸ்தான் தடை விதித்தது.
இதையடுத்து இப்போது ஈரானின் மகான் ஏர் நிறுவனத்தின் விமானங்கள் தெஹ்ரானில் இருந்து காபூல் வழியாகடெல்லிக்கு விமான சேவை நடத்த இந்தியா அனுமதி அளித்துள்ளது. வாரம் இருமுறை இந்த விமானங்கள்இயக்கப்படும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications