ஆண்டிப்பட்டியில் போய் பணத்தைக் கொட்டுவதா?அதிமுகவுக்கு வைகோ கண்டனம்
திருச்சி:
தங்கள் தொகுதியின் வளர்ச்சிக்காக அரசு ஒதுக்கிய நிதியை அதிமுக எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் இடைத்தேர்தல் நடக்கவுள்ள 3 தொகுதிகளுக்கும் ஒதுக்கி வருவதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டித்துள்ளார்.
அடுத்த மாதம் இடைத் தேர்தல் நடக்கவுள்ள ஆண்டிப்பட்டி, வாணியம்பாடி, சைதாப்பேட்டை தொகுதிகளின்வளர்ச்சிப் பணிகளுக்காக அதிமுக எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் தங்கள் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளநிதியைத் தந்து வருகினறனர்.
இந்த 3 தொகுதிகளையும் கைப்பற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளில் அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால்,கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசிடம் இந்தத் தொகுதிகளுக்காக செலவழிக்க பணம் இல்லை.
இதனால், தங்கள் தொகுதி வளர்ச்சி நிதியை இந்த 3 தொகுதிகளுக்கும் திருப்பி விடுமாறு எம்.பி,எம்.எல்.ஏக்களுக்குக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜெயலலிதா போட்டியிடவுள்ள ஆண்டிப்பட்டி தொகுதிக்கு செலவு செய்வதில் அதிமுக எம்.பி.,எம்.எல்.ஏக்கள் இடையே பெரும் போட்டியே ஏற்பட்டுள்ளது.
இதற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
ஒவ்வொரு எம்.பியும், எம்.எல்.ஏவும் தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி வளர்ச்சி நிதியை தங்கள் தொகுதிமக்களுக்காகத் தான் செலவு செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு கோடிக்கணக்கான பணத்தை இந்த 3 சிறியதொகுதிகளிலும் செலவழித்துவிட்டு பிற தொகுதிகளை நட்டாற்றில் விடுவது ஜனநாயகம் அல்ல.
இது தேர்தல் கமிஷனின் விதிமுறைகளுக்கும் எதிரானதாகும்.
இந்த 3 தொகுதிகளும் மதிமுக தனியே தான் போட்டியிடும். இதில் எந்த மாற்றமும் இல்லை.
அதிமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகளும் விலகி வருவது அந்தக் கட்சி தனிமைப்படுத்தப்பட்டு வருவதைத்தான் காட்டுகிறது.
கம்யூனிஸ்ட் கட்சிகளும் விலகிவிட்டால் அதிமுக பலவீனமடைந்துவிடும்.
இந்த இடைத் தேர்தலால் பெரிய அளவில் அரசியல் மாற்றம் எதுவும் தமிழகத்தில் ஏற்பட்டுவிடாது.
ஆட்சியில் இருக்கும் அரசுகள் இடைத் தேர்தல்களில் முறைகேடு செய்வது வழக்கமாகப் போய்விட்டது.
இவ்வாறு வைகோ கூறினார்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications