நாகப்பட்டினத்தில் அரசு பேருந்து பயணிகளுடன் ஜப்தி
நாகப்பட்டினம்:
சாலை விபத்தில் காயமடைந்த பாதிரியாருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் உரிய நஷ்டஈடு கொடுக்காததால்,நீதிமன்ற உத்தரவின் பேரில் வியாக்கிழமை அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
நாகப்பட்டினம் அருகே உள்ள கருங்கண்ணி கிராமத்தில் அமைந்துள்ள தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர்ஜான் அருளானந்தம்.
இவர் 19.04.98 அன்று மோட்டார் சைக்கிளில் கருங்கண்ணி அருகே சென்று கொண்டிருந்தபோது, அரசுப் பேருந்துமோதியதில் பலத்த காயமடைந்தார். பிறகு தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் நஷ்டஈடு கோரி பாதிரியார் வழக்கு தொடர்ந்தார். பாதிரியாருக்கு ரூ.1.66 லட்சம்நஷ்டஈடு வழங்கும்படி குடந்தைக் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தீர்ப்பு வெளியாகி 3 மாதங்களாகியும் போக்குவரத்துக் கழக நிர்வாகம் நஷ்டஈடு தராததால், அரசுப் பேருந்தைஜப்தி செய்து ஒப்படைக்குமாறு வியாழக்கிழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுடன் நின்றிருந்த வேதாரண்யம் செல்லும் பேருந்தைநீதிமன்ற அலுவலர்கள் ஜப்தி செய்து நாகை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினார்.












Click it and Unblock the Notifications