இடைத்தேர்தலுக்கு மத்திய பாதுகாப்புப் படை: திமுக கோரிக்கை
சென்னை:
இடைத்தேர்தலில் பாதுகாப்புக்கு மத்திய அரசு பாதுகாப்புப்படையை அனுப்ப வேண்டும் என்று திமுக கோரிக்கைவிடுத்துள்ளது.
திமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அதில் பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இடைத் தேர்தல் நடக்கும் மூன்று தொகுதிகளிலும் அதிமுக அதிகார துஷ்பிரயோகம் செய்து போலிவாக்காளர்களை தேர்தல் விதிக்கு புறம்பாக சேர்த்துள்ளது.
தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் அவர்கள் இது பற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தேர்தல்கமிஷனிடம், தேர்தல் பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்பு படை மற்றும் தேர்தல் நடவடிக்கைகளை கவனிக்கஅதிகாரிகள் நியமிக்க கோரிக்கை வைக்க வேண்டும்.
தேர்தலில் போட்டியிட திமுகவுக்கு ஆதரவு அளித்த கூட்டணி கட்சிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்டணிக்கட்சிகள், அதிமுக அரசு உயர்த்தியுள்ள விலைவாசி குறித்துமக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
கண்ணகி சிலையை அகற்றியதற்கு அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம், சிலையை மீண்டும் அதே இடத்தில்நிறுவ வேண்டும் என்று அரசை கேட்டுக் கொள்கிறோம்.
தீவிரவாதத்துக்கு எதிராக வாஜ்பாய் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமுக ஆதரவளிக்கும் என்பதுபோன்று பல தீர்மானங்கள் அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
போலி வாக்காளர்களை நீக்க மனு
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் சமீபத்தில் டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷனர்கள் டான்டன் மற்றும்ஜே.எம். லிங்டோவிடம், போலி வாக்காளர்களை நீக்க உத்தரவிடுமாறு மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அந்த மனுவில், திமுக இதுபற்றி தொகுதியில் உள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை.
மேலும் தேர்தலில் அதிமுக இது போன்ற அதிகார துஷ்பிரயோகம் செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறும்அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications