இடைத் தேர்தல்: திமுகவினர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் இன்று முதல் திமுக கட்சி தலைமையகத்தில்விண்ணப்பிக்கலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.இதில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் இதுவும் ஒன்றாகும்.
அதன்படி இடைத் தேர்தல் நடக்கும் மூன்று தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை நிறுத்தும்.
இந்த மூன்று தொகுதிகளிலும் திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் ஜனவரி 7ம் தேதி முதல் 15ம் தேதிவரை பதிவு கட்டணமாக ரூ.5,000 செலுத்தி மனுக்களை கட்சியின் தலைமை நிலையமான அண்ணாஅறிவாலயத்தில் தாக்கல் செய்யலாம்.
இவ்வாறு அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications