"100 ரூபா கொடுத்தா 300 ரூபா"... கும்பகோணத்தில் மோசடிக் கும்பல் கைது
கும்பகோணம்:
கும்பகோணத்தில் ரூபாய் நோட்டுகளை 3 மடங்காக மாற்றுவதாக கூறி மோசடி செய்து வந்த கும்பலைப் போலீசார்கைது செய்தனர்.
கும்பகோணத்தில் ஒரு கும்பல் 100 ரூபாய் நோட்டுக்களாக கொடுத்தால் மூன்று மடங்காக மாற்றுவதாக ஏமாற்றிவந்துள்ளது.
இந்த கும்பல் கறுப்பு மையால் ரூபாய் நோட்டுகளின் மீது தடவி, ரசாயனத்தில் கழுவி பிறகு மூன்று மடங்காகமாற்றுவதாக ஏமாற்றி உள்ளது.
இவர்கள் கும்பகோணத்தை சேர்ந்த வியாபாரி சேகர் என்பவரிடம் ரூ. 10,000 வாங்கி மூன்று மடங்காக மாற்றிதருவதாக கூறி ஏமாற்றி உள்ளது. அந்த வியாபாரி கும்பகோணம் போலீசில் புகார் கூறியுள்ளார்.
கும்பகோணம் முழுவதும் போலீசார் அந்த கும்பலைப் பற்றி விசாரித்துள்ளனர். பிறகு 3 பேர் சேர்ந்த அந்த கும்பல்போலீசாரிடம் பிடிபட்டது.
அவர்களிடமிருந்து மை தடவிய ரூபாய் நோட்டுக்கள், ரசாயனப் பொருட்கள் ஆகியவற்றையும் போலீசார்பறிமுதல் செய்தனர்.
அவர்கள் 3 பேர் மீதும் மோசடி வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications