காணாமல் போன மாஜி அதிமுக எம்.எல்.ஏ. - போலீசார் மீது மகன் சந்தேகம்
சென்னை:
அதிமுக கட்சியின் உயர்மட்டத்தின் அறிவுரைப்படி எனது தந்தை எம்.கே. பாலனை டி.ஜி.பி. சட்டவிரோதமாககாவலில் வைத்து, ஏதோ வாக்குமூலம் பெற முயற்சித்து வருகிறார் என்று பாலனின் மகன் உயர் நீதிமன்றத்தில்தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளார்.
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வும், தற்போதைய திமுக பொதுக்குழு உறுப்பினருமான பாலன் கடந்த 30ம் தேதிமுதல் காணவில்லை. அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிடக்கோரி அவரது மகன் மணிமாறன் சென்னைஉயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை நீதிமன்ற விடுமுறைக்கு பிறகு தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையில்,மணிமாறன் மற்றொரு மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர்கூறியிருப்பதாவது:
என் தந்தை கடத்தப்பட்ட செய்தி பத்திரிக்கைகளிலும், டிவிக்களிலும் வெளியான பின், என் தந்தையை போலீசார்தூக்கிச் சென்றதாக எனக்கு பல தகவல்கள் வந்தன.
கடந்த 30ம் தேதி மாருதி வேனில் வந்த போலீசார் என் தந்தையை அழைத்துச் சென்றதைப் பார்த்ததாகவும், மாருதிவேனின் பதிவு எண்ணை காண தவறி விட்டதாகவும் பாக்ஸிங் பயிற்சியாளர் சுகுமார் என்னிடம் தெரிவித்தார்.
அதிமுக கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளின் அறிவுரைப்படி டி.ஜி.பி. எனது தந்தையைத் தூக்கிச் சென்று சட்டவிரோதமாக வாக்குமூலம் பெறுவதற்காக விசாரித்து வருகின்றனர். தற்போது நீலாங்கரை காரைக்காட்டுக் குப்பம்பகுதியில் உள்ள பீச் ரிசார்ட்டில் வைத்து விசாரித்து வருவதாக தெரிகிறது.
எனது சகோதரர் சம்பந்தப்பட்ட அந்த இடத்துக்கு சென்றுள்ளார், ஆனால் அவரை உள்ளே அனுமதிக்காமல்போலீசார் விரட்டியடித்துள்ளனர். அங்கு நின்றிருந்த மாருதி வேனில் அதிமுக கொடி கட்டியிருந்தது. அதனால்எனது தந்தை அதிமுகவின் சொல்படிதான் கடத்தப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது.
எனவே இந்த வழக்கில் டி.ஜி.பி.யையும், நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டரையும் பிரதிவாதியாக சேர்க்கஉத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications