தற்காலிகமாக தப்பியது இளங்கோவன் பதவி
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் பதவி மீண்டும் ஒரு முறை தப்பியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியில் யார் தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவரை எதிர்த்து உடனடியாக ஒரு கோஷ்டிசெயல்படத் தொடங்கும்.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த கோஷ்டி மோதல்களால் தமிழகத்தில் வளரவே வாய்ப்பில்லாத நிலைமைக்குகாங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டு விட்டது.
தற்போதைய தலைவர் இளங்கோவனும் இதில் விதிவிலக்கல்ல. அவர் பதவிக்கு வந்த சில வாரங்கள்தான்அமைதியாக இருந்தது. அதற்குப் பிறகு கோஷ்டிகள் தலை தூக்க ஆரம்பித்து விட்டன.
தங்கபாலு தலைமையில் ஒரு கோஷ்டி, அடைக்கல ராஜ் தலைமையில் ஒரு கோஷ்டி, அன்பரசு தலைமையில் ஒருகோஷ்டி என பல கோஷ்டிகள் கிளை விரிக்கத் தொடங்கின.
ஜெ.வுடன் உரசல் போக்கு:
இளங்கோவன் ஆரம்பம் முதலே ஜெயலலிதாவுடன் உரசல் போக்கையே கடைப்பிடித்து வந்தார். இது அதிருப்திகோஷ்டிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
காலம்காலமாக அதிமுக கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சி, அதிமுக ஆதரவை புறக்கணிப்பதா என்றுஅவர்கள் பொங்கி எழுந்தனர்.
மேலும் திமுகவுக்கு ஆதரவாக இளங்கோவன் நடந்து கொள்வதாகவும் அவர்கள் பொருமினர். இதுகுறித்துக்கட்சித் தலைமைக்கும் தெரியப்படுத்தினர்.
உடனடியாக இளங்கோவனை மாற்றிவிட்டு, எங்களில் ஒருவரை தலைவராக நியமிக்கவும் என்று கட்சித்தலைமைக்கு இந்தக் கோஷ்டிகள் அவ்வப்போது கோரிக்கை விடுத்து வந்தன.
சோனியா அலட்சியம்:
அடிக்கடி டெல்லிக்கும் சென்று இளங்கோவன் குறித்து வத்தி வைக்கவும் செய்தனர். ஆனால் தமிழக காங்கிரஸ்வரலாறு தெரிந்த அகில இந்தியத் தலைமை இவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்து விட்டு வேறுவேலையைப் பார்க்க ஆரம்பித்து விடும்.
ஆனால் இப்போது நிலைமை கொஞ்சம் சீரியசானது. உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 10 சதவீதவாக்குகள் கிடைத்துள்ளதாக கட்சித் தலைமைக்கு இளங்கோவன் அறிக்கை அனுப்பியிருந்ததாக கூறப்பட்டது.
ஆனால் உண்மையில் 2 சதவீதம் மட்டுமே கிடைத்தது, இளங்கோவன் பொய் சொல்லியுள்ளார் என்று கூறிஅதிருப்தி கோஷ்டிகள் அனைத்தும் இணைந்து கட்சித்தலைமைக்கு விளக்கின.
மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் காங்கிரஸ் கட்சியில்சேரக் கோரி இளங்கோவன் கடிதம் அனுப்பியிருந்தார். இதுவும் அதிருப்தி கோஷ்டிக்கு சாதகமாக அமைந்தது.
அதிருப்தியாளர்கள் தீவிரம்:
இந்தஇரண்டு விஷயங்களையும் வைத்து இளங்கோவனை எப்படியும் மாற்றியே தீருவது என்ற உத்வேகத்தில்அதிருப்தி கோஷ்டிகள் அனைத்தும் டெல்லிக்குப் பறந்தன. இளங்கோவனும் டெல்லிக்குச் சென்றார்.
அங்கு சட்டசபை இடைத் தேர்தல் குறித்து கட்சித் தலைவர் சோனியாவிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது,தமாகா கடிதம், வாக்கு விகிதம் குறித்த தகவல் உள்ளிட்டவை குறித்து அவருடன் விளக்கம் கேட்டுள்ளார்சோனியா. இளங்கோவனும் விளக்கம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.
தப்பியது தலை:
இதையடுத்து அதிருப்தியாளர்களின் கருத்தைக் கேட்ட சோனியா, அதிமுகவுடன் கூட்டணி சேர வேண்டும்என்பதற்காக இளங்கோவனை மாற்ற முடியாது. இப்போதைக்கு இளங்கோவனே கட்சித் தலைவராக நீடிப்பார்என்று கூறிவிட்டார்.
இடைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது, தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைப்பதாஎன்பது குறித்து இரண்டு நாட்களில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து அதிருப்தியாளர்களின் முயற்சி தற்போதைக்கு தோல்வியைத் தழுவியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications