ரேஷன் கார்டு கணக்கெடுப்பு திடீர் நிறுத்தம்
சென்னை:
புதிய ரேஷன் கார்டு வழங்குவதற்காக நடத்தப்பட்டுக் கொண்டிருந்த கணக்கெடுப்புப் பணியை நிறுத்த தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.
வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவை தமிழகஅரசு நேற்று (திங்கள்கிழமை) மாலை திடீரென்று எடுத்தது.
தமிழக மக்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து அதன்படி இருவிதமான ரேஷன் கார்டுகளை வழங்க கடந்தஆண்டு இறுதியில் தமிழக அரசு திட்டமிட்டது.
அதன்படி மாதம் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே இருப்பவர்கள்என்றும் அவர்களுக்குப் பச்சை நிறத்தில் ரேஷன் கார்டு வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
மற்றவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் என்றும் அவர்களுக் நீல நிறத்தில் கார்டு வழங்கவும்முடிவானது.
இதையடுத்து கடந்த 1ம் தேதி முதல் இதற்கான கணக்கெடுப்புப் பணி துவங்கியது. அதிகாரிகளும் அரசுஊழியர்களும் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.
வரும் ஏப்ரல் மாதத்திற்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தக் கணக்கெடுப்புப் பணியை தமிழக அரசு திடீரென்று நிறுத்தியுள்ளது.
வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களைக் கண்டறிவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்றும்அதற்குரிய சில மாற்றங்களைச் செய்வது அவசியம் என்றும் இதனால்தான் கணக்கெடுப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.
புதிய கணக்கெடுப்பைத் துவங்கும் பணி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications