காங்கிரசுடன் இணைய வேண்டாம்: வாசனுக்கு 5 லட்சம் தமாகாவினர் கடிதம்
சென்னை:
தமாகா தனித்தே இயங்க வேண்டும், எக்காரணம் கொண்டும் காங்கிரசுடன் இணையக் கூடாது, என்று கட்சித்தலைவர் வாசனுக்கு 5 லட்சம் கடிதங்களை அனுப்ப தமாகா நிர்வாகிகள மற்றும் தொண்டர்கள் முடிவுசெய்துள்ளனர்.
மூப்பனார் உயிருடன் இருக்கும்போதே தமாகாவை காங்கிரசுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகாங்கிரஸில் வலுத்து வந்தது. ஆனால் அப்படி இணையும் பட்சத்தில் தமாகாவின் இரண்டாம் கட்டத் தலைவர்களின்பதவிக்கு ஆபத்து நிலவும் என்ற கருத்தும் நிலவி வந்தது.
இந்நிலையில் மூப்பனார் மறைவை அடுத்து, தமாகா இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும், தானாகவேகாங்கிரஸில் இணைந்து விடும் என்ற காங்கிரஸின் எதிர்பார்ப்பில் இடி விழுந்தது. அவரது மகன் வாசன் தலைவராகநியமிக்கப்பட்டார்.
காங்கிரஸில் இணைய விரும்பவில்லை என்று சோனியாவை சந்தித்து கூறிவிட்டு, கட்சியை பலப்படுத்தும் பணியில்தீவிரமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தில் இறங்கி விட்டார் வாசன். அவரிடம் தொண்டர்கள், காங்கிரஸில்இணையும் எண்ணம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.
தொண்டர்களிடம் எழுந்துள்ள இந்த எழுச்சியைப் பார்த்து அக்கட்சியின் தலைவர்கள் இது குறித்து தினமும்ஆலோசனை நடத்தி வருகின்றனர். பேச்சுவாக்கில் மட்டும் இருந்து வந்த இந்த கோரிக்கையை, எழுத்து மூலம்கட்சிக்கு தெரிவிக்க தொண்டர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி முதலில் 5 லட்சம் தொண்டர்கள் தனித்தனியாக கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்ப முடிவுசெய்யப்பட்டுள்ளது. எந்த காரணம் கொண்டும் காங்கிரஸில் இணையக் கூடாது, தனித்து இயங்க வேண்டும் என்றுகடிதம் அனுப்பப்பட உள்ளது.
வாசனின் சுற்றுப்பயணம் முடிந்து திரும்பும்போது, இந்த கடிதங்கள் அனுப்பத் தயாராகி வருகின்றன. சென்னையில்இதற்கு ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கி விட்டன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications