ஈரோட்டில் கோவில் காவலாளி கொலை - உண்டியல் பணம் கொள்ளை
ஈரோடு:
ஈரோடு அருகே கோவிலுக்குள் நுழைந்த ஒரு கும்பல, தூங்கிக் கொண்டிருந்த காவலாளியை கொலை செய்துவிட்டு உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சமீபகாலமாக கோவில்களில் உடைப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.கடந்த வாரத்தில் சிவகிரி அருகே 3 கோவில்களில் உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன.
இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் முத்தூர் கொடுமுடி சாலையில் அத்தனூர்அம்மன் கோவில் உள்ளது. இங்கு முன்னாள் ராணுவ வீரரான கோவிந்தசாமி (65) இரவு காவலராக பணியாற்றிவருகிறார்.
இவருடன் கோவில் துப்புறவு தொழிலாளி குமாரசாமி, பூசாரி ஜோதி ஆகியோர் திங்கள்கிழமை இரவு பூஜை முடிந்தபின் கோவில் முன் வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவுக்கு மேல் கோவிலுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் படுத்திருந்த மூவரையும் சரமாரியாகதாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட காவலாளி அந்த இடத்திலேயே இறந்து விட்டார். மற்றஇருவரும் மயக்கமடைந்து விட்டனர்.
பிறகு அந்த கும்பல் கோவிலினுள் இருந்த இரண்டு உண்டியல்களையும் உடைத்து பணத்தை கொள்ளையடித்துதப்பி விட்டது. மயக்கம் தெளிந்த பின் காயமடைந்த இருவரும் போட்ட அலறல் சத்தத்தில், கோவிலுக்கு அருகில்வசிப்பவர்கள் உள்ளே சென்று அவர்களை மீட்டனர்.
இவர்கள் இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரது நிலையும் மிகக்கவலைக்கிடமாக உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் பொங்கல் திருவிழா இரண்டு தினங்களுக்கு முன்பு தான் முடிந்தது.திருவிழா முடிந்தவுடன் உண்டியல் திறக்கப்படும்.
ஆனால் இப்போது உண்டியலை திறப்பதற்கு முன்னரே கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது.அந்த உண்டியல்களில் சுமார் ரூ.20,000 இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சமீபத்தில்தான் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் கொள்ளையர்கள் புகுந்து 2 உண்டியல்களைக்கொள்ளையடித்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications