ஜான் டேவிட் விடுதலை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்
சென்னை:
கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்ட நாவரசு கொலை வழக்கில், ஜான் டேவிட்டுக்கு விடுதலைஅளிக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது தமிழக அரசு.
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமியின் ஒரே மகனான நாவரசு, சிதம்பரம்அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மருத்துவம் படித்து வந்தார்.
அந்தக் கல்லூரியில மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த ஜான் டேவிட், நாவரசுவை ராகிங் செய்தார். அதற்குநாவரசு எதிர்ப்பு காட்டவே, ஜான் டேவிட் ஆத்திரமடைந்து, நாவரசுவை தலை, கை, கால் என்று துண்டம்துண்டமாக வெட்டி தண்ணீரில் வீசிவிட்டதாக ஜான்டேவிட் மேல் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த கொலை வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 1998 மார்ச் 11ம் தேதிஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஜான் டேவிட் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜான் டேவிட் தான் கொலை செய்தான் என்பதற்குத் தேவையான சாட்சிகள்திருப்திகரமாக இல்லை. அதனால் அவரை விடுதலை செய்கிறோம் என்று கடந்த ஆண்டு அக்டோபர் 5ம் தேதிதீர்ப்பு வழங்கினர். இதையடுத்து ஜான் டேவிட் விடுதலை செய்யப்பட்டான்.
தற்போது தமிழக அரசு அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) மேல் முறையீடுசெய்துள்ளது.
நாவரசு கொலை வழக்கில் கடலூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்துமாறு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications