அதிமுக-தமாகா உறவு தொடருமா? - இன்று முடிவு
சென்னை:
அதிமுகவுடனான உறவைத் தொடர்வது குறித்து இன்று (சனிக்கிழமை) நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில்முடிவெடுக்கப்பட உள்ளது.
கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், தமாகா, பாமக,மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் அங்கம் வகித்தன.
ஆனால் தேர்தல் முடிந்த 2 மாதங்களிலேயே அதிமுகவுடனான உறவை பாமக துண்டித்துக் கொண்டது.
அக்டோபர் மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளும் அதிமுககூட்டணியிலிருந்து விலகி தனித்தனியாகப் போட்டியிட்டன.
ஆனாலும் அசைக்க முடியாத கட்சியாக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றது. மூப்பனார்மறைவால் காலியான ராஜ்யசபா சீட்டையும் அதிமுகவே கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் அதிமுகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கடந்த வாரம் குட்பை சொல்லிவிட்டது. வரும் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தரப் போவதில்லை என்று இக்கட்சி கூறிவிட்டது.
இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் தொடருமா என்ற பெரும் கேள்விக் குறியுடன் இன்று தமாகாவின்நிர்வாகக் குழு கூடுகிறது.
அதிமுகவின் தொடர்ந்த புறக்கணிப்பு, பொதுமக்களிடையே அதிமுக அரசின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி, தமாகாதொண்டர்களின் மனநிலை ஆகியவை காரணமாக இன்றைய கூட்டத்தில் அனல் பறக்கும் என்று தெரிகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications